பக்கம்:கனியமுது.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

“போகின்றாள் பார் இவட்கு இலட்சம் பல இலட்சம்
செல்வத்திலே புரண்டிட வல்ல சீமாட்டி
அவ்வளவும் கணவன்மார் தந்திட்ட தய்யா
அவளைத் தொட்டவர்கள் பிணமாவர் மெய்யாய்!
எவ்வளவு செல்வம் இருந்தென்ன இவளுக்கு
இல்லற இன்பமதோ நீடிப்பதில்லை
கொண்டவனை உருட்டிவிடும் கொடிய வளிவளைக்
குவலயம் சுமந்திடுதல் குற்றம், பெருங்குற்றம்.”
இவ்விதமும் இன்னும் பலவிதமும்—
பேசிடுவர் ஏசிடுவர் பற்பலரும் என்றெண்ணி
நாடுதை னைக் கடந்து செல்கின்றாள் பாரீஸ்,
நளினிகளும் நாயகரும் நடமாடும் நகரம்—
ஆங்கவளும் காணுகின்றாள் ஓவியன் ஒருவனையே!
ஓவியம் தன்னால் ஊதியம் கிடைக்கா தென்பதனால்
மோடார் ஓட்டுகின்றான் வாடகைக்கு — ஊர்சுற்றுவோர்க்கு
முரட்டுக் குணம், ஆனால் உள்ளம் வெள்ளை;
எப்படியோ அவனை ஒப்புக்கொள் கின்றாள்

எளிய வாழ்க்கையிலே ஈடுபடு கின்றாள்

118

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/129&oldid=1380288" இலிருந்து மீள்விக்கப்பட்டது