பக்கம்:கனியமுது.pdf/130

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


"கெட்டவளே, கீழ்மகளே! காதற் கிழத்தியெனத்
தொட்டார் பிணமாவர்! துன்பச் சுரங்கமிவள்!"

என்று பலவாறாய் ஏசுமன்றோ இவ்வுலகம்?
அன்றவள் நெஞ்சுபடும் அல்லல் அறியாதே!

நாடுவிட்டு நாடு சென்று நலிந்த உளந்தேற
நாடுகின்றாள் பாரி செனும் நாகரிகப் பேரூர்!

ஓவியந் தீட்டி, வரும் ஊதியம் போதாமல்
ஆவிவண்டி ஓட்டி அதனைச் சரிக்கட்டும்
கள்ளமிலா வெள்ளைமனப் பிள்ளை ஒருவனது
உள்ளம் பிடித்ததால் ஒப்பிவிட்டாள் வாழவே!

செல்வமில்லை ஆகச் சிறப்பான ஏழ்மையிலே
நல்விதமாய் இல்லம் நடத்தி மகிழ்ந்தனளே!

119

119

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/130&oldid=1380217" இலிருந்து மீள்விக்கப்பட்டது