பக்கம்:கனியமுது.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது

அவனில்லா வேளை தன்னில் ஆளனிடம் ஓர் குரங்கு
வண்ணம் குழைத்து ஓவியம் வரைகிறது ஆங்கு
இவனும் வரைகின்றான் அதனையுந் திருத்தி
இன்னார் இவர் என்று எவரும் அறியா நிலையில்
ஓர்நாள் அவன் ஓவியம் ஒன்று
புதுமை கலந்தது புரட்சி மிக்கது என்று
பொருள் அதிகம் கொடுத்தொரு ரசிகன்
வாங்கி விடுகின்றான் வருகிறது விபத்து!
‘ஓவியக் கலைதனிலே ஒப்புயர் வற்றவன் காண்!
காவியம் தெரிகிறது இவன் காட்டும் திரை தன்னில்
என்றெல்லாம் புகழ்கின்றார் பொருளும் குவிகிறது!
‘இசையைத் திரையினிலே காட்டிடுவேன்
ஒலியும் ஓவியமாய்த் தெரிந்திடவே நான் செய்வேன்’
என்றுரைத்துக் கருவிகளை அமைத்துமே ஓவியனும்
ஏதேதோ தீட்டுகின்றான்; எல்லாமே அற்புதம் ஆகுதுகாண்
எங்கெங்கோ விழாக்கள் ! எங்கும் அவன் பவனி !
எளிமை வாழ்வளித்த இனிமை மாய்கிறது

ஏந்திழையாள் இழந்திட்டாள் இல்லற வாழ்வதனை !

120

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/131&oldid=1380319" இலிருந்து மீள்விக்கப்பட்டது