பக்கம்:கனியமுது.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


ஓர்நாள் அவனுடைய உயர்திறத்தைப்
பாராட்டக் கூடிவிட்ட பல்லாயிரவர்
ஓடோடி அவனைச் சூழ்ந்து கொண்டதாலே
அவர் நடுவே சிக்கி அவன் மிதியுண்டு மாண்டான்!
மீண்டும் வந்தது அந்தக் கருப்புடை
மேலும் சேர்ந்தது அவட்குப் பெருநிதி-
'இத்தனை தொல்லையைத் தந்திட்ட பணமே
இனி உன்னை நான்சேர்த்து வைத்திடவோ கூடாது
சேச்சே! நீ வேண்டாம்! சென்றுவிடு உடனே'
எனச் செப்பாமற் செப்பி ஓர் திட்டம் வகுத்தாள்
"அத்தனை பணத்தையும் அளித்திட வந்தேன்
அரசாங்கம் இதனை அருள்கூர்ந்து ஏற்று
அல்லல்தனைத் துடைத்து ஆதரிக்க!" என்றாள்.
இதனைக் கேட்டவுடன் மயக்கம் அதிகாரிக்கு.
இவளுக்குச் சித்தம் குழம்பற்று என்று
மருத்துவ நிபுணரிடம் அழைத்துமே சென்றார்
அவரிடம் கதை தன்னை அன்னவளும் கூற-
மயங்கிக்கீழே அவரும் வீழ்ந்துவிட்டார், அந்தோ!

126

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/137&oldid=1380269" இலிருந்து மீள்விக்கப்பட்டது