பக்கம்:கனியமுது.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


அயல்நாட்டில் வாழ்வோர்க்குத் தாய்நாட் டில்ஏன்
அழகான ஒருமனேவி தனியே வாடி,
அயல்வீட்டுக் காளேயரின் தொல்லை ஏற்றே,
அங்கங்கள் குறும்பாலே தவறி ழைக்கும்
செயல்மாற்ற வகையற்றுத் திணறும் போக்கைச்
சிந்திக்க முத்தப்பன் முற்புட் டானா?
பயல்மட்டும் தன்இன்பம் பார்த்துக் கொண்டான்!
பாவையவள்ஏழ்மையினால் பெண்மைகெட்டாள்!

கங்தப்பன் ஊர்வாயை மூடு தற்குக்,
கைக்குழந்தைக் காரியைத்தன் துணைவி என்று
சொந்தமுடன் உறவாடி, வேற்றுார் தன்னில்
சோற்றுக்கும் வகைதந்தான்; வாழ்ந்து வங்தார்!
செங்தழலைத் தண்பனியாய்க் கருதிக் கொண்ட
திறனிழந்த முத்தப்பன், சீனாக் காரி
வங்தவழி மறைந்திடவே, மயக்கங் தீர்ந்து,

மதிதெளிந்து, தாயகத்தை நினைவு கூர்ந்தான்!

3

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/14&oldid=1459279" இலிருந்து மீள்விக்கப்பட்டது