பக்கம்:கனியமுது.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

“இருந்திடுவான், காட்டுகின்றேன், வா வா!” என்றேன்.
    இருவருமே மேற்சென்றோம். சாலே ஒரம்
விரைந்திடுமோர் சாய்க்கடையின் கரையில் குந்தி,
    வெற்றிலையில் காய்ந்துவிட்ட சுண்ணாம் பின்மேல்
நிறைந்து விழும் கழிவு நீரை அள்ளி ஊற்றி,
    நிம்மதியாய், ஈரமாக்கி வாயி லிட்டுக்,
கரைந்திடாமல் மெல்லுகின்ற ஒருவன் கண்டோம்!
    கவனியப்பா; இவனேதான்; இவன் பின் செல்வோம்!”


என்றுரைத்தேன். பின்தொடர்ந்தோம்; என்ன விங்தை!
    எண்ணியது சரியாக, எதிர்ப்பு றத்தில்
சென்றடைந்தான்; வரவேற்றாள் தொழுநோய்க் காரி!
    சிரிப்பென்ன, அணைப்பென்ன, சிறிது நேரம்!
‘வென்றுவிட்டேன்; வாழ்க்கையெனில் ஆண்பெண் ஒன்றும்
    விதிமுறையை உணர்த்திவிட்டேன்! எனக்கு தித்தேன்!!’
“நன்று, நன்று! நமக்கினிமேல் கடைச்சாப் பாடு
    நடக்காதென் றப்பாவுக் குரைப்பாய்!” என்றேன்.

11

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/22&oldid=1380081" இலிருந்து மீள்விக்கப்பட்டது