பக்கம்:கனியமுது.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


பஞ்சாங்கம் எப்போதும் வலக்க ரத்தில்;
    பார்வையிலே முதுமையில்லை பழுது நேர-
அஞ்சாமல் மேல்நாட்டான் அறிவாற் கண்ட
    அழகுமிகும் கண்ணாடி மூக்கின் மீது;
நெஞ்சாரச் சோதிடர்கள் கதையை நம்பி
    நிகழ்ச்சிகளை நடத்துவதில் பெருவி ருப்பம்;
நஞ்சாக இருந்தாலும் நாள்பார்க் காமல்
    நாவினிலே இடமாட்டார் சோம நாதர்!

வீட்டினின்று புறப்படும்முன் இராகு காலம்;
    வெளிச்செல்ல வந்தாலோ சகுனம் பார்ப்பார்!
'பாட்டிகளின் காலமுதல் பழக்க மான
    பழமைமிகு கொள்கைகளேத் தள்ளேன்,’ என்பார்!
காட்டில்போய் வாழ்ந்துகொண்டா இதைச்சொல்கின் றார்?
    காகிதமும், வாகனமும், மின்ன லோடு
போட்டியிடும் ஒளிவிளக்கும், இவைபோல் மற்ற
    புதுமைகளை அனுபவித்து மகிழ்வோர் தாமே!

12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/23&oldid=1380095" இலிருந்து மீள்விக்கப்பட்டது