பக்கம்:கனியமுது.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்


சிக்கனமாய்க் காலமெல்லாம் சேர்த்து வைத்த
      சிறுமுதலுக் கொருமகளே உரிய ளாணாள்.
தக்கதொரு சோதிடரைக் கொண்ட வட்குச்
      சாதகத்தை விரிவாக எழுதி விட்டார்.
மிக்கவொரு துடிப்புடனே கல்வி கற்று,
      மேற்படிப்பும் விழைந்திட்டாள். ஆனால் தங்தை,
அக்கணமே தடுத்திட்டார்; சாத கத்தில்
      அவ்வளவே போதுமென விதித் தாலே!


இல்லத்தில் அடைபட்டாள் எனினும், நல்ல
      எழிலுருவம், இளம்பருவச் செழுமை மேனி,
வெல்லத்தின் சுவைகமழும் அன்புப் பேச்சு,
      விழிக்கடையில் அருள்வழியும் கனிந்த நோக்கு:
சொல்லத்தான் முடிவதில்லை நெஞ்சில் பொங்கும்
      சோகத்தைத்! தங்தைசொல் மீற மாட்டாள்!
மெல்லத்தன் உணர்வுகட்குத் தாழ்ப்பா ளிட்டு,
      வேளையெதிர் பார்த்திருந்தாள், விடிவு காண

13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/24&oldid=1380107" இலிருந்து மீள்விக்கப்பட்டது