பக்கம்:கனியமுது.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


மணப்பருவம் எய்திவிட்ட செய்தி கேட்டு,
      வரன்தேடி அலகின்ற தரகர் கூட்டம்
பணப்பையைக் கரைப்பதற்கு வந்து சேர்ந்தார்!
      பாரெங்கும் ஊரூராய்த் திரிந்து சென்று,
குணப்பொருத்தம் குடிப்பொருத்தம் காணு முன்னே
      கோள்நிலையும் நாள்நிலையும் குறித்துப் பார்த்துக்,
கணப்பொழுதுங் தவறாமல் கணித்த தென்று,
      கடைசியிலே ஒருவரனை முடிவு செய்தார்!


சாதகங்கள் பொருந்தியதால் மற்ற வற்றைச்
      சரியாகப் பார்க்கவில்லே சோம நாதர்.
‘பாதகமா செய்திடுவார் தரக'ரென்று,
      பையனது வெளியழகைக் கண்டு நம்பிச்,
சூதறியா உளத்தினராய்ச் சம்மதத்தைச்
      சொல்லிவிட்டார் நல்லதெனச் சிறப்பு மிக்க
சாதனையாய்த் திருமணத்தை நடத்தி வைத்துச்,
      சகலவித சீர்வரிசை மகிழ்ந்து தங்தார்!

14

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/25&oldid=1380124" இலிருந்து மீள்விக்கப்பட்டது