பக்கம்:கனியமுது.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

அடுத்துள்ள இளைய பிள்ளை படித்த வன்தான் ;
        அம்மாவுக் கெதிர்வார்த்தை அறிய மாட்டான்!
கடுத்தமுகம் கனல் தெறிக்கக், கமலா வுக்குக்
        கட்டளையோ, அவனெதிரில் வரக்கூ டாதாம்!
விடுத்த பெரும் ஆணையினால், அடுக்களைக்குள்
        விதவையவள் சதமாக முடங்கிப் போனாள் !
எடுத்தழிக்க வொண்ணாத செல்வர் வீட்டில்
        ஏந்திழையை இளையவற்குத் தேர்ந்து கொண்டார்.

மாப்பிள்ளை பார்ப்பதற்கு வந்த நாளில்
        மங்கலமாய் மேள இசை முழங்கும் போது...
பூப்போன்ற கமலா, தன் துயர்ம றைத்துப்
        புன்னகையும் மின்னலிட முன்னே வந்தாள்.
“கூப்பிட்ட தார் உன்னைக் குடி கெடுத்த
        கோட்டானே? அபசகுனம்! எங்கள் வீட்டுச்
சாப்பாடு தந்திட்ட திமிரோ?” என்று

        தலைமுடியை வளைத்திழுத்துத் தரையில் மோத—

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/30&oldid=1380346" இலிருந்து மீள்விக்கப்பட்டது