பக்கம்:கனியமுது.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனியமுது


விண்வீதி நின்று கண்சிமிட்டுங் தாரகையும்
தண்ணீர்த் தடாகத்தில் தண்டூன்றும் அல்லியும்
சோகங் தவிர்த்துச் சுடராம் அமுதத்தில்
மோகம் மிகுந்திட, மூண்டெழும் ஆவலுற,
இன்ப வெறியூட்டுந் தன் பொற் கிரணத்தால்
மன்பதையை வாழ்விக்க மையல் வளர்ப்பதிலே
எங்குங் தனக்கீடாய் யாதுமில்லை என்றெண்ணிச்
செங்கோலை ஒச்சிவரும் சிங்காரத் தங்கநிலா--


மானும் மயிலினமும் மீனும் விளையாடத்,
தேனும் சுவைக்கரும்பும் தீங்கனியும் ஓங்கிட,
மல்லிகை முல்லை மருக்கொழுந்து சண்பகம்
நல்ல நிறப்பூக்கள் எல்லாம் மலர்ந்திருக்கும்
பூந்தோட்டம்; அங்கெல்லாம் நீந்தித் தவழ்ந்தோடி
மாந்தர் உடல்தீண்டி மாறாச் சுகமளிக்கும்
ஈடற்ற தென்றலெனும் இத்தனை சூழ்நிலையில்...
தேடக் கிடைக்காத தெய்வீகக் காதலர்கள்:

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/33&oldid=1380108" இலிருந்து மீள்விக்கப்பட்டது