இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சுருண்டமுடி, நேர்வகிடு, சிவந்த மேனி,
- சுறுசுறுப்பாய் இயங்குகின்ற கால்கள், கைகள்,
மருண்டெதையும் நோக்காத மிதந்த பார்வை;
- வாயிதழில் தொத்திகிற்கும் புன்ன கைதான்!
இருண்டநிறக் காற்சட்டை, முழுக்கைச் சட்டை,
- ஏற்றவாறு தொங்குகின்ற கழுத்துப் பட்டை!
உருண்டோடி ஒன்றையொன்று துரத்திச் செல்லும்
- உந்துவண்டி விரைவுகுன்றி, ஒரம் நிற்க- “,
இடக்கையில் கருப்புகிறச் சிறிய தோல்பை
- எடுத்தவாறு கீழிறங்கி நேரே பார்த்தான்.
அடுக்கிவைத்த பெட்டிபோல உயர்ந்து நிற்கும்
- அண்ணாந்தால் கழுத்துகோவும் மாடமொன்றில்
முடுக்கிவிட்டால் மேலேற்றும் படியில் சென்று
- மூடியதும், பொத்தானில் விரலை வைத்தான்.
மிடுக்காக ஒர்கணத்தில் மூன்றாம் மாடி -
- மீதிறங்கி, வெளியேறி, முன்னே நோக்கி,
- மீதிறங்கி, வெளியேறி, முன்னே நோக்கி,
33