பக்கம்:கனியமுது.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



காலையிலே கழனிக்குச் செல்வார் ; வெய்யில்
கடுமையாக ஏறியபின் வீடு வந்தும்
வேலையிலே முதியவரின் சாயல் இன்றி
மிடுக்கிருக்கும்; சுறுசுறுப்பு மிகுந்தி ருக்கும்!
மாலையிலே மையிருட்டுப் படரு முன்னர்
மடிப்புடனே சலவையுடை தரித்த வாறு,
சாலையிலே கைப்பிரம்பைச் சுழற்றிக் கொண்டே
சடசடென கடந்திடுவார் ; இரவே மீள்வார் !


“இங்கேரம் நகரத்தில் அலுவல் என்ன ?
என்றவரின் மனைவிளக்குக் கேட்ப தில்லை.
பொன்னேபோல் கணவரையே போற்றிக் கொண்டு
புழுக்கத்தை மனத்திற்குள் மூடிக் காப்பாள் !
தன்னிடத்தில் இல்லாத எதையோ அந்தத்
தையலிடம் பெறத்தானே செல்லு கின்றார் ?
‘என்னிடத்தே வைத்த அன்புங் குறையக் காணேன் ,
ஏனதிலே தலையிடுதல் ? என்றி ருப்பாள்.

53

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/64&oldid=1380241" இலிருந்து மீள்விக்கப்பட்டது