பக்கம்:கனியமுது.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்

தங்களுக்கு மகவில்லை; எனக்குந் தானே?
    தனியாக இன்னெருத்தி வருவ தாலே
தங்களுக்கு மகன்பிறந்தால், எனக்கு நேரும்
    செளகரியம் ஏதுமுண்டோ ? அதனால் இந்தச்
சங்கடத்தைத் தீர்ப்பதற்கு, நானும் மற்றோர்
    தகுதியுள்ள கணவரையே தேட வேண்டும்!
இங்கிருவர் மனக்குறையும் தீரு மன்றோ ?
    என்ன பதில்?” எனக்கேட்டாள் வீர மங்கை !


இடியோசை கேட்டவனாய்த் திடுக்கிட் டுப்போய்
எதிர்நிற்கும் திறனற்ற கணவன் நோக்கி,
“அடியாளை மன்னிப்பீர், அத்தான்! இந்த
அலங்கோலம் யாதொன்றும் நிகழ வேண்டாம் !
முடியாத செயலுண்டோ உலகில் இன்று ? -
முதிர்ந்ததோர் உடற்கூறு வல்லா ராலே
விடியாத நம்வாழ்வில் வெள்ளி தோன்றும் ,
விரைந்திடுவோம்! “என்றிட்டாள், வெற்றி பெற்றாள்!

61.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/72&oldid=1383230" இலிருந்து மீள்விக்கப்பட்டது