பக்கம்:கனியமுது.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆனந்தம் கவிதைகள்



குறுக்குவழிக் கையூட்டு முறைக ளாலே
    குறைந்தபுள்ளி நிறைந்துவிடும் என்று கேட்டு-
முறுக்குடனே செல்வந்தர் வண்டி யேறி
    முதன்முதலாய்த் தமிழய்யா வீடு சேர்ந்தார்!
கறுக்கெனவோர் ஆயிரத்தைக் கையில் தங்து
    நயமாகத் தான்வந்த செய்தி சொன்னார்!
மறுக்கின்ற கணவரைத்தன் விழியால் சுட்டு,
    மனை யாட்டி உள்ளழைத்து மிரட்ட லானாள்!


“ஈன்றாளின் நோய்தீர்க்க வகையு மாகும்;
    இன்னும்நம் கடனெல்லாம் ஒழிக்கக் கூடும்;
தோன்றாத துணையாகத் தேடி வந்தார்,
    சுருக்கமாக முடிப்பீர்!” என் றாணை யிட்டாள்.
‘ஈன்றாளே இறங்தாலும், ஈனச் செய்கை
    எந்நாளும் புரியேன்!” என்றெதிர்த்துச் சொல்லிச்
சான்றாண்மை மிக்கதமிழ்ப் பண்பு காத்தார்;
    தன்மனையாள் ஆணவமும் நொறுக்கி விட்டார்

75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/86&oldid=1383199" இலிருந்து மீள்விக்கப்பட்டது