பக்கம்:கனியமுது.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


வண்டியோட்டுங் குப்பண்ணன் பருவக் காளை;
      வரவுக்குக் குறைவில்லை; இரவுப் போழ்தில்
கொண்டமட்டுங் குடித்திடுவான்; குதிரை தின்னக்
      கொள்வாங்கி வைத்திடுவான்; மீதிக் காசில்
உண்டுவிட்டும் படுப்பதுண்டு ! குடிசை காக்கும்
      உரிமையுளார் யாருமில்லை! ஊரார் பார்த்துக்
கண்டபடி அலைக்கழியா திருப்பா னென்று
      கன்னியம்மாள் என்பவளைக் கட்டிப் போட்டார்!

நிறுத்தவில்லை அவன்பழக்கம் ! நேர்மை கெட்டோர்
      நெறியற்ற அல்வழியில் காய்ச்சி விற்கும்
வெறுத்தொதுக்க வேண்டியதீச் சரக்கு தம்மை
      வீதியிலே புரளுமாறு விழுங்கி வீட்டுப்—
பொறுத்திருக்க ஒண்ணாத நீதி மன்றம்
      புத்திவர மூன்று மாதம் சிறையில் தள்ள—
மறுத்து வழக் காடுதற்கு வழியு மின்றி

      வதைந்திட்டான்; மனையாளும் தனியே ஏங்க!

87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கனியமுது.pdf/98&oldid=1380066" இலிருந்து மீள்விக்கப்பட்டது