பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப் போராட்டம்

95

யணிகளைச் சிதறடித்தான். சென்னையில், ஆங்கிலேயர் வலுத் தளர்வது கண்டு, பம்பாய் அரசியலார், கடல் வழியாக மலபாரைத் தாக்கினர். ஹைதர், மலபாருக்குத் திப்புவை அனுப்பினான். இங்கே, சில நாட்கள் எதிரியுடன் திப்பு போராடிக் கொண்டிருந்தான்.

மழை காலம் வந்த பின், போரில் எல்லாக் கட்சியினரும், தாமாக ஓய்வுற்றுப் போரைத் தளர விட்டனர். ஆனால், ஹைதரின் தளர்ச்சிக்கு, ஒரு தனிக் காரணம் இருந்தது.

ஹைதர் உடல் உரம் வியக்கத் தக்கதானாலும், ஓயாத போர் முயற்சியால், உள்ளூர முறிவுற்றிருந்தது. முதுகில் ஏற்பட்ட ஒரு புற்று, இப்போது அவனுக்கு ஓயாத தொல்லை தந்தது. மருத்துவர் முயற்சிகள் எவையும் பலிக்காது போன பின், ஹைதர் நோயை எல்லாரிடமிருந்தும் மறைத்துக் கடமையில் ஈடுபட்டிருந்தான்.

ஆரணிப் போருக்குப் பின், ஆங்கிலேயரின் முதுபெரும் படைத் தலைவர் ‘கூட்’ உயிர் நீத்தான். அதனையடுத்து, 1782, டிசம்பர் 7-ம் நாள் ஹைதரின் வீர ஆவியும், சித்தூர் அருகிலுள்ள நரசிங்கராயன் பேட்டைக் கூடாரத்தில் அகன்றது.

ஹைதரின் ஏற்பாட்டினால், புதிய அரசியல் ஏற்பாடு முடியும் வரை, அவன் மறைவு எவருக்கும் தெரியாமல் வைக்கப்பட்டது. தந்தை உடனடியாக அழைப்பதாக மட்டும், திப்புவுக்கு ஆணை பிறந்தது. திப்பு வந்து, தந்தையின் ஆணைப்படி, மறைவாக உடலடக்கம் செய்து, ஆட்சி ஒழுங்கமைந்த பின்னரே, ஹைதரின் முடிவு வெளியே மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

மக்கள் குடியிலே, போர் வீரர் மரபிலே பிறந்த ஹைதர், மக்கள் அழைப்பாலும், மாநிலத்தின் அவாவாலும்