104
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
ஹைதரின் நினைவாற்றல், மனித எல்லை கடந்த ஒன்றாகவே இருந்தது. கேட்ட ஒவ்வொரு சொல்லையும், பல ஆண்டு கடந்தும், அவன் நினைவில் வைத்திருப்பான். ஒரு தடவை கண்ட முகத்தையும், அது போலவே, இருபது, முப்பது ஆண்டுகள் கழித்தும், அவன் அடையாளம் கண்டு கொள்வான். உருவை மறைக்கும் வகையில், மேற்கொள்ளப்படும் உரு மாறாட்டங்கள் கூட, அவன் வகையில் பயன்படுவதில்லை. எத்தனை ஆண்டு கழித்தும், எந்தச் சூழலிலும், எந்த வேடத்திலும், அவன் ஆளையறிந்து கொள்வது கண்டு, அவன் நண்பர் வியப்படைந்தனர். அவன் எதிரிகள் அஞ்சி நடுங்கினர்.
ஒரு தடவை, ஒரு குதிரைச் சேணம் பழுதாய் விட்டது. அது பயன் படாதென்று எறியப்பட்டது. அது குப்பையுடன், குப்பையாய்க் கிடந்தது. குப்பை கூட்டுபவர் கூட, அதைக் கவனிக்கவில்லை. அது பற்றி, எவரும் எண்ணவும் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பின், சேணங்களை மேற் பார்வையிடும் போது, ஹைதர் ‘பழுதுபட்டு எறியப்பட்ட சேணம் எங்கே?’ என்று கேட்டான். எல்லாரும் விழித்தனர். ஹைதர் சேணத்தின் அடையாள விவரங்களை நுணுக்கமாகத் தெரிவித்தான். அந்த அடையாள விவரங்களை, மனதிற் கொண்டு தேடிய பின், அது குப்பைக் கூளத்தில் புதையுண்டு கிடந்து, கண்டெடுக்கப்பட்டது.
பல ஆண்டுகளுக்கு முன், கண்ட ஆண்களை மட்டுமன்றி, அவர்கள் குரலையும், பல செய்திகள் பற்றிய நுட்ப, நுணுக்க விவரங்களையும், அவன் கூரிய உள்ளம் விடாது பற்றிக் காக்கும் இயல்புடையதாயிருந்தது.
ஒரே சமயத்தில், பல காரியங்களிலும் ஈடுபட்டு, எல்லாவற்றிலும் ஒருங்கே கருத்துச் செலுத்தும் திறமும், ஹைதரிடம் இருந்தது. கடிதங்களை ஒருவர் வாசிப்பதைக்