பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

மறக்கவும் இல்லை. ஆயினும், அவர்கள் அதைத் தம் இனத்தவர்க்கு—ஆளும் இனத்தவர்க்கு—ஒருநிலையான எச்சரிக்கையாக மட்டுமே தீட்டினர். ஆளப்படும் மக்கள் கண்களில், அதன் மெய்யான உருவம் தென்படாமல் இருக்கும்படி, அவர்கள் அதற்குச் சாயமடித்து உருமாறாட்டம் செய்தனர். மெய்யான ஊடு நூலுடன், பொய்யான பாவு நூலிழைத்து, அவர்கள் திரை இயற்றினர். அத்திரையிலே விடுதலையின் வீரத் திருவுரு, வேட்டைக் காட்டின் வெங்கொடுமைப் பேருருவாகக் காட்சி தந்தது.

இம்மாறாட்டத் திரை அகற்றி, ஹைதர் வாழ்வின் பார தீர உருவில் நாம் கருத்துச் செலுத்தவேண்டும்.

விடுதலைப் பயிர் வளர்க்க முனையும் நமக்கு, அவ்விடுதலை இயக்கத்தின் நாற்றுப் பண்ணைக்கே வித்தும், உரமுமிட்ட வீர வாழ்வு ஒரு நல்ல வழி காட்டியாதல் ஒரு தலை. நமக்கும், நம் பின்னோர்களுக்கும் அது நற்பயனூட்டும் பண்புடையதாய் அமையும் என்பதும் உறுதி.

2. காலமும் களனும்

ஹைதர் வாழ்வாகிய நாடகத்துக்கு 18-ம் நூற்றாண்டின் நடுப்பகுதி ஒரு மேடையாய் அமைந்தது. அக்காலத் தென்னகத்தின் அரசியல் சூழல்களே அதற்கேற்ற பின்னணித் திரைகளாக இயங்கின. காலம், களன் ஆகிய அத்திரையின் இரண்டு கூறுகளையும் தெளிவாக உணர்ந்தாலல்லாமல், ஹைதர் வாழ்வைச் சரிவர மதிப்பிட முடியாது.

கனனட நாடு இன்னும் அரசியலரங்கத்திலே அழைக்கப் படவில்லை. தமிழகம் ‘சென்னை’ என்று அழைக்கப் படுவது போல, அது மைசூர் என்றே அழைக்கப்