மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்
105
கேட்டுக் கொண்டே, கட்டளைகளை எழுதுபவருக்குக் கட்டளை வாசகம் கூறல், வேலை செய்பவர்களை மேற்பார்த்தல், கணக்குப் போட்டுப் பார்த்தல் முதலியவற்றையும் செய்து, எதிலும் வழுவில்லாமல் நிறைவேற்றும் அவன் ஆற்றல் வியப்புக்குரியதாயிருந்தது. காலை வேளையில், அம்பட்டன் அவனை வழித்துக் கொண்டிருக்கும் போதே, ஒற்றர்கள் கூறிய செய்திகளை அவன் கேட்பான். நினைவுக் குறிப்பு எதுவும் இல்லாமலே, ஒருவர் செய்தியுடன், மற்றவர் செய்தியை ஒப்பிட்டு, அவன் தேவைப்பட்ட போது, அவர்களைக் குறுக்குக் கேள்விகள் கேட்டான். குறிப்புகளுடன் வந்த ஒற்றர்கள், அவன் கேள்விகளுக்கு விடை கூறத் திணறுவார்கள்.
நினைவாற்றலிலும் அரிது, அவன் அறிவாற்றல். அவனுடன் பழகியவர்களுக்கு அது ஒரு மாய ஆற்றலாகவே இருந்தது. உண்மையில், அது அவன் ஆழ்ந்த அனுபவம், கூரிய மதி நுட்பம் ஆகியவற்றின் பயனேயாகும். குதிரைகள், மணிக் கற்கள், தோல் வகைகள் ஆகிய எப்பொருளையும் கண்ட மாத்திரத்தில், அவனால் மதிப்பிட்டுத் தேர்ந்து விட முடிந்தது. படை வீரர், படைத் தலைவர், பணித் துறையாளர் ஆகியவர்கள் முகங்களை ஒரு தடவை கண்டதுமே, அவர்கள் தகுதி, திறமை, நேர்மை, அனுபவம், அவர்கள் உள்ளத்தின் சிந்தனைகள் ஆகிய அத்தனையும், அவன் குறித்துணர வல்லவனாயிருந்தான். படைத் துறையில் அவன் அனுபவம், விலை மதிப்பற்ற ஒரு மூலதனமாய் அமைந்தது. ஏனென்றால், அவன் தேர்ந்தெடுத்த படைக்கலங்கள், குதிரைகள், ஆட்கள் எல்லாம், என்றும் தலை சிறந்த தேர்வுகளாகவே இருந்தன.
இவ்வருந்திறமையால், மைசூரின் ஆட்சியரங்கங்களிடையே அவன் ஒரு பெரிய அனுபவ ஆட்சியரங்கமாக