மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்
107
களுக்கும், உண்மையானவர்களுக்கும் அடிக்கடி பரிசும், பாராட்டும் வழங்கி ஊக்கினான்.
சோம்பேறிகள், கடமை தவறியவர்கள், பொது மக்களைச் சுரண்டியவர்கள் ஆகியோருக்கு ஹைதர் பொல்லாத கூற்றுவனாயிருந்தான். இத்தகைய குற்றஞ் செய்தவர்களை, அவன் கடுமையாகத் தண்டிக்கவோ, பதவியிலிருந்து நீக்கவோ தயங்கவில்லை. நீக்கிய பின், இரக்கம் காட்டுவதுமில்லை. ஆனால், இவ்வகையில் அவன் பொது மக்களையோ, பார் மக்களையோ நடத்தியது போலவே, தன் புதல்வர்களையும், உறவினர்களையும் நடத்தினான். நேர்மையில் அவன் என்றும் வழுவியது கிடையாது.
வீரருக்கும், வீரப் படைத் தலைவர்களுக்கும் ஹைதர் காட்டிய மதிப்பை, உலகில் வேறு எந்த அரசனும், அரசியல் தலைவனும் காட்டியிருக்க முடியாதென்னலாம். திறமை, தகுதி, அனுபவம், உண்மைப் பற்று ஆகியவை காரணமாகவே, அவன் ஆட்களைத் தேர்ந்தெடுத்தான். ஆதரித்து, உயர்த்தினான். ஆனால்,உயர்த்திய பின், அவர்கள் பெற்ற உரிமையும், சலுகையும், நண்பர், குடும்ப உறுப்பினர் கூடப் பெற்றிருக்க முடியாது. இதற்கு இரு நிகழ்ச்சிகள், ஒப்பற்ற சான்றுகளாகின்றன.
சர்க்கூலிப் போரைப் பற்றிய பேச்சு, ஒரு நாள் எழுந்தது. ஹைதர் உட்படப் படைத் தலைவர்களும், படை வீரர்களும் விழுந்தடித்துக் களம் விட்டு ஓடிய நிகழ்ச்சி அது. அதன் நினைவு, ஹைதரைச் சோகத்தில் ஆழ்த்திற்று. ஆனால், அவன் தன் வெப்பத்தை உடனிருந்த தலைவர் மீதே கொட்டினான். “ஆம்! அன்று நம் படைத்தலைவர்கள் அத்தனை பேரும் கோழைகளாக, ஆட்டுக் கூட்டங்களிலும், கேவலமாக நடந்து கொண்டார்கள். அது மட்டுமன்று; தங்கள் உயிரை வெல்லமாகக் கருதி, அதைக் காப்பதற்காக, ஆயிரக்கணக்-