பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

108

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

கான வீரரை வீணே பலி கொடுத்தனர். அதை நினைக்கும் போது, இத்தகைய நன்றி கெட்டதுகளை வைத்துக் காப்பாற்றுவதற்காக நான் வெட்கப்படுகிறேன்” என்றான். மன்னன் கடுமொழிகள் கேட்டு, எல்லோரும் தலை குனிந்திருந்தனர்.

படைத் தலைவர்களிடையே, அப்போது யாஸீன் கானும் இருந்தான். அவன் செயலை எண்ணியிருந்தால், ஹைதர் அவ்வாறு பேசியிருக்க முடியாது. அவன் அப்போரில் பட்ட காயங்களுக்கு, எல்லை இல்லை. அதிலேயே அவன் ஒரு கண்ணையும் இழந்திருந்தான். அத்துடன், அவன் ஹைதராக நடித்து, ஹைதரையே காப்பாற்றியிருந்தான். அதன் பயனாக, அவனுக்கு நூறு குதிரை வீரர்கள் காவற் படையினராக அளிக்கப்பட்ட போது, அவன் “எனக்கு ஒரு குதிரையே போதும், நூறு வேண்டாம்” என்று கூறி விட்டான். இக்காரணத்தால் அவன் ‘ஒண்டி குதிரி’ அல்லது ‘ஒற்றைக் குதிரையன்’ என்று கேலிப் பெயரும் பெற்றிருந்தான்.

இத்தகைய வீரன், ஹைதர் கடுமொழி கேட்டுத் திடுமெனச் சினங் கொண்டான். “சரிதான் அரசே. நாங்கள் சிறிது தோற்றதனால், இவ்வாறு கூறுகிறீர்கள். ஆனால், தோல்வியும், வெற்றியும் முழுதும் மனிதன் செயலுக்குட்பட்டதன்று. போகட்டும். நாங்கள் இல்லாமல் போனாலும், அன்று நீங்கள் தோல்விதான் அடைந்திருப்பீர்கள்.ஆனால், எனக்கு இந்தக் கண் போயிருக்காது. அந்தக் கண்ணை உங்களுக்காகக் கொடுத்தேனே, உங்களுக்கு நன்றி இருக்கிறதா?” என்றான்.

ஹைதர் தலை கவிழ்ந்து கொண்டான். “நான் உங்களை மறந்து பேசி விட்டேன்” என்றான்.

இது மட்டுமல்ல; ஹைதரைப் போல், சர்க்கூலியில் நடிப்பதற்காகவே, அவன் தோல்வியின் நடுவே, தாடி சிரைத்துக் கொண்டான். ஆனால், பிற்பட அவன் மீண்டும் தாடி