பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

கள்” என்று கூறி, ஹைதர் நிதிக் கணக்கர்களுக்கு ஆணை பிறப்பித்தான்.

இஸ்லாமிய மன்னர், பெருமன்னரிடையே மிகச் சிறந்தவர்கள் கூடச் சமயத் துறையில் மட்டும் வெறியுடையவர்களாக இருந்ததுண்டு. அக்பர், ஷாஜகான் போன்ற வடபுல மன்னர்கள் இதற்கு விலக்கானவர்கள் என்று புகழப்படுவதுண்டு. இது பெரிதும் உண்மையே. ஆனால், அக்பரும், ஷாஜகானும் தங்கள் ஆட்சி நலனைக் கருதி, அரசியல் தந்திர முறையிலேயே, சமரசப் பண்பாளராயிருந்தனர். இன்னும் சிலர், எம்மதமும் சம்மதமே என்ற ஆழ்ந்த சமயப் பற்றற்ற பொது நிலையிலேயே சமரசம் பேணியுள்ளனர். ஆனால், ஹைதரின் சமரசம் ஆழ்ந்த சமய உணர்வின் பயனாக எழுந்ததேயாகும். அக்பர் சமரசத்தையும், ஷாஜகான் சமரசத்தையும் போற்றும் ஆங்கில வரலாற்று ஆசிரியர், தெரிந்தோ, தெரியாமலோ ஹைதரைச் சமயத் துறையில் அசட்டையாளன் எனக் குறிப்பிடுகின்றனர். இது தவறு என்பதை கீழ் வரும் செய்திகளும், ஹைதர் வாய்மொழிகளும் காட்டும்.

தசராக் கொண்டாடுவது பற்றியும், சைவ, வைணவக் கோயில் மானியங்களைக் குறைக்கவாவது செய்யாமல் வழங்குவது பற்றியும் இஸ்லாமியத் தலைவர் குறைப்பட்டனர். இது சமயப் பகைமைச் செயலாகும் என்றனர். “சமயப் பகைவர்க்கு உதவுவதும், நலம் செய்வதும் சமயப் பகைமை ஆக மாட்டாது. நபிகள் நாயகம் அது செய்ததால்தான், நாம் முஸ்லீம்களாயிருக்கிறோம்,” என்று விளக்கம் தந்தான் ஹைதர்.

இயேசுபிரானிடம், சமயப் பிற்போக்கராகிய புரோகிதர் குறுக்குக் கேள்வி கேட்ட போது, இயேசுபிரான் கூறிய நகைச்சுவையும், பண்பும் வாய்ந்த விளக்கங்கள் பல. ஹைதரிடம் இஸ்லாமிய சமயத் தலைவர், கட்சி எதிர்க் கட்சி-