மன்னவன் மாண்பும் ஆட்சியும் மாட்சியும்
113
ஹைதரின் இயல்பான நகைத் திறன். பேச்சு வன்மை, நடு நிலைமை ஆகியவற்றை மேலும் இரு நிகழ்ச்சிகள் காட்டுகின்றன.
‘அடிமைப் பெண்’ என்ற பொருளுடைய ‘லௌண்டிகா’ என்ற சொல்லை ஹைதர் அடிக்கடி வழங்குவதுண்டு. அது திட்டுவதற்குப் பயன்படும் சொல்; அருமையாக அழைப்பதற்கும் பயன்படுவது. படைத்தலைவன். அலி ஸுனீமான் கான் ஒரு நாள், ‘இந்தச் சொல் கொச்சையானது. ஹைதரைப் போன்ற பெருமன்னன் வாய் மொழியில் இடம் பெறும் தகுதியுடையதன்று’ என்று மெல்லக் கடிந்தான். ஹைதர் நகைச்சுவையுடன், இதற்களித்த மறுப்பு, சமயவாணர் நூலறிவுக்கு மிகவும் இனிதாயிருந்தது. “அன்பரே, என்ன இருந்தாலும் என் போன்றவரும், உம் போன்றவரும் அடிமைப் பெண்களின் மக்கள்தான்! பீடுடை மாதர் பெற்ற திலகங்கள் என்ற பெயருக்குப் பாத்திரமானவர்கள் ஹுசேன் துணைவர்கள் மட்டும்தான் என்பது உமக்குத் தெரியாதா?” என்றான்.
மறை நூலுரை மரபுக்குப் புது வழக்கு அளித்த இம்மறு மொழியின் சுவையில், சமயவாணரைப் போலவே நண்பர்களும் நெடிது ஈடுபட்டு, மகிழ்ந்தார்கள்.
தகுதியில் குறைந்த மன்னரைப் போல, ஹைதர் முகப் புகழ்ச்சியை விரும்புவதில்லை. முகப் புகழ்ச்சியை நயமாகக் கடிந்து, தன் மதிப்புணர்ச்சியைத் தூண்டுவதில், ஹைதர் திறம் பெரிதாயிருந்தது. கீழ் வரும் நிகழ்ச்சி, இதற்குச் சான்று. சுரா மாகாணத்தின் தலைநகரில் ஒரு புது மரபு இருந்தது. கல்லறை மாடங்கள், அங்கே வீடுகளின் முன், தெரு நடுவே இருந்தன. அந்நகரத்தை வென்றபின், ஹைதர் இச் செய்தியைச் சுட்டிக் காட்டினான். ‘இதற்கு என்ன காரணம்?’ என்று நண்பர்களைக் கேட்டான்.
8