பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

116

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

ஹைதரின் பொன்னாணயம் ‘ஹொன்’ அல்லது பொன் என்பது. அதன் ஒரு புறம் ‘ஹை’ என்ற பாரசிக எழுத்தும், மறுபுறம் புள்ளிகளும் பொறிக்கப்பட்டன. செப்பு நாணயங்களில், ஒருபுறம் யானை உருவம் பதிக்கப்பட்டது. நல்லமைப்புடைய ஹைதரின் யானை இறந்த பின், அதனிடம் உள்ள ஆழ்ந்த பற்றுக் காரணமாக, அதன் நினைவாக, அவ்வுருப் பொறிக்கப்பட்டதாக அறிகிறோம்.

ஹைதரின் அரச முத்திரையில் பொறிக்கப்பட்ட வாசகம் “ஃவதஃ ஹைதர் உலகை ஆளப் பிறந்தான். அலிக்கு நிகரானவனும் இல்லை. அவன் வாளுக்கு ஈடானதும் இல்லை” என்பது.

அவன் கைப்பொறிப்பில் ‘ஃவதஃ ஹைதர்’ என்ற தொடர் இருந்தது. பாரசீக மொழியில் எழுத்துக்கள் எண்களைக் குறிக்கும்.

ஹைதர் காலமான இஸ்லாமிய ஹிஜிரி ஆண்டை இவ்வாறு எழுத்தில் அடக்கி, அவ்வெண்களின் விவரம் நினைவுக் குறியாக,

‘ஹைதர் அலிகான் பகாதுர்’

என்ற தொடரை அமைத்துப் பாரசிகக் கவிஞர்கள் ஹைதர் புகழ் நிறைப் பா இயற்றியுள்ளனர்.

தென்னாட்டின் சிங்கமான ஹைதர் வாழ்வு, பாரசிக மொழியில் மட்டுமன்றி, கன்னட மொழி, தமிழ் மொழிகளில் பொறிக்கப்பட்டு, வருங்காலத் தென்னாட்டுத் தேசியத்தை வளர்ப்பதாக அமையுமாக !