பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


4. தென்னக அரசியல் அமளி

ங்கில ஆட்சி தென்னகத்தில் வேரூன்ற வகை செய்த பெருநிகழ்ச்சி கருநாடகப் போரேயாகும். அதன் பின்னாளைய விளைவுகளை நோக்க, அதை நாம் ‘தென்னாடு விடுதலை இழந்த வரலாறு’ என்று குறிப்பிடலாம். தென்னாட்டுக்கு அதன் படிப்பினைகள் நிலையானவை. அதன் எச்சரிக்கைகள், காலத் திரையில் ஆழப் பதிந்துள்ளவை.

விடுதலை இழப்பால் பயன் இழந்தவர்கள் தென்னாட்டு மக்கள். பயன் அடைந்தவர்கள் ஆங்கிலேயர். ஆனால்,, பயன் அடையத் திட்டமிட்டவர்கள் பிரஞ்சுக்காரர்கள். சிறப்பாக, பிரஞ்சுத் தலைவராயிருந்த அந்நாளைய தலை சிறந்த அரசியல் மேதை, டியூப்ளே!

பழம், மரத்தை விட்டு அகன்று விட்டது. ஆனால், அது எய்தவன் கையில் விழவில்லை. அதன் அருமையறியாத மூன்றாவது பேர்வழியின் கை வசப்பட்டு விட்டது. தென்னாட்டு வரலாற்றின் ஒரு முக்கோணப் புதிர் இது.

தென்னகத்தின் விடுதலை வாழ்வு, பிரஞ்சுப் பேரரசாட்சி, ஆங்கில ஆதிக்கம் என்ற மூன்று தலைகளையுடைய முக்கோணச் சக்கரத்தின் சுழற்சியே, கருநாடகப் போராட்டம். முதல் நிகழ்ச்சி நிறைவேறப் பாடுபட்டவன் ஹைதர். மற்றத் தென்னகப் பேரரசுகளும், அரசுகளும் குந்தமாயிருந்திரா விட்டால், அதில் அவன் வெற்றி பெற்ருப்பான். ஆனால், தென்னகத்தின் வேற்றுமைப் பிணக்குகள், இரண்டாம் நிகழ்ச்சிக்கு உதவின.

இரண்டாம் நிகழ்ச்சி வெற்றி பெறக் கனவு கண்டவன் டியூப்ளே. அதை அடைவதற்குரிய துணிவு, அரசியல்