தென்னக அரசியல அமளி
27
தந்தான். அத்துடன் மன்னர் பெயரில், தனிப் படை திரட்டும் உரிமையும், அவனுக்குத் தரப்பட்டது. அமைச்சரோடொத்த துணையமைச்சராக அவன் படிநிலை உயர்ந்தது.
1750-க்குள் போர் நாஸிர் ஜங் பகதூருக்கு எதிராகத் திடீரென்று திரும்பிற்று. அரசியல் சூழ்ச்சிகளில் வல்ல டியூப்ளே, தன் கை வரிசையைத் திடுமெனச் செஞ்சிக் கோட்டை மீது திருப்பினான். நவாப்கள் ஆர்க்காட்டைத் தலைநகராகத் தேர்ந்தெடுக்கு முன், சிவாஜி கால முதல் அதுவே தமிழகத்தின் தலைநாயகக் களமாக இருந்து வந்தது. பிரஞ்சுப் படைத் தலைவன் புஸி அதைக் கைப்பற்றியதனால், கடப்பை, கர்நூல் முதலிய பகுதிகளிலுள்ள வலிமை வாய்ந்த குறுநில மன்னர் பிரஞ்சுச் செல்வாக்குக்கு உடன்பட்டனர். அவர்கள் உதவியுடன், நாஸிர் ஜங்கு சூழ்ச்சிப் பொறியில் சிக்க வைக்கப்பட்டான். சின்னாட்களில் அவன், சதிகாரர் கைபட்டு இறந்தான்.
முஸபர் ஜங், இப்போது பிரஞ்சு உதவியுடன் நிஜாமானான். முகமதலி ஆர்க்காட்டை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு ஓட வேண்டியதாயிற்று. இங்கும் அவன் சந்தா சாகிபினால் முற்றுகையிடப்பட்டான். இச்சமயத்தில், முகமதலி ஆங்கிலேயர் உதவி நாடினான். இது முதல், முகமதலி, இறந்து போன நாஸிர் ஜங் மரபினர் ஆகியவர் பக்கமாக ஆங்கிலேயரும் கருநாடகப் போரில் ஈடுபட்டனர்.
பொதுவாக, இச்சமயத்திலும் இதற்குச் சில நாள் பின்னரும், பிரஞ்சுத் தலைவர்களை விட, ஆங்கிலத் தலைவர்கள் அரசியல் திறமையும், போர்த் திறமையும் குன்றியவர்களாகவே இருந்தார்கள். ஆயினும், ஹைதரைப் போலக் குடிமக்கள் மரபிலிருந்து எழுந்த ராபர்ட் கிளைவ் என்ற வீரன், இப்போது ஆங்கிலேயர் மதிப்பை உயர்த்த முன்