தென்னக அரசியல் அமளி
29
பயிற்றுவிப்பதில், இது முதல் அவன் மிகுதிக் கவனம் செலுத்தினான். படைத் துறை நடவடிக்கை நுட்பங்களிலும், அவன் கருத்தாராய்ச்சி ஓடிற்று. தவிர, பயிற்சி வகைகளிலும், அமைப்பாண்மைத் துறையிலும் பிரஞ்சுப் படைத் துறை வல்லுநர்களையும், பணித் தலைவர்களையும் அமர்த்த இது தூண்டுதலளித்தது. பிரஞ்சு மக்களின் வாய்மையும், உறுதியும் இவ்வேளையில் அவனுக்குப் பெரிதும் பயன்பட்டன.
மைசூர் அமைச்சன் நஞ்ச ராஜன் தன் பக்கமும், பிரஞ்சுக்காரர் பக்கமுமாக ஊசலாடுவதை முகமதலி கண்டான். நஞ்சி ராஜன் பேரவாவைத் தூண்டி, அவனைத் தன்பக்கம் இழுக்க முயன்றான். ஆகவே, தன் எதிரியாகிய சந்தா சாகிபை அழித்துத் தமிழக முழுவதையும் வெல்ல உதவினால், திருச்சிராப்பள்ளிக் கோட்டையையும், அதைச் சார்ந்த பகுதிகளையும் நஞ்சி ராஜனுக்கு அளிப்பதாக அவன் நைப்பாசைக் காட்டினான். மைசூர் மன்னனும், மக்களும் இதை விரும்பவில்லை. ஆயினும் பேராவல் தூண்ட, நஞ்சி ராஜன் இதை ஏற்றான். ஹைதரையே, படையுடன் அப்பக்கம் அனுப்பினான்.
தன் கட்சியை வலுப்படுத்தும்படி, நஞ்சி ராஜன் குத்தியை ஆண்ட மராட்டியத் தலைவன் மொராரி ராவையும், பிற தலைவர்களையும் பணம் கொடுத்துத் தன் வசப்படுத்தினான். மராட்டியப் படைகளும், கொள்ளைக் கூலி பெறும் ஆர்வத்துடன் உடன் சென்றன.
இரண்டாவது கருநாடகப் போரில், பிரஞ்சுக்காரர் வீழ்ச்சிக்கும், ஆங்கிலேயர் வெற்றிக்கும், ஹைதர் அலியே பேரளவு காரணமாய் அமைந்தான். ஆங்கில வரலாற்றாசிரியர் இதை மறைத்து மழுப்பியுள்ளனர். கிளைவின்