பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புகழ் ஏணி

33

அதாவது 1749- லேயே அவன் பிறந்தான். வீர மைந்தன் மேனியுடன் மேனியாகவே, இது முதல் ஹைதரின் புகழ் வளர்ந்தது.

முகமதலியின் சதியால், நஞ்சி ராஜன் நிலை இரண்டக நிலையாயிற்று. படை வீரர்கள் ஊதியம் கோரி, அமளி செய்தனர். முகமதலியை நம்பியதால், ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும் இருவருமே அவன் எதிரிகளாயினர். அத்துடன், மைசூர் அரண்மனையில், அவன் மதிப்பு மிகவும் வீழ்ச்சியடைந்தது. அவன் எதிரிகள் மன்னன் காதில், அவனுக்கு எதிராகக் கோள் மூட்டி, மன்னன் சீற்றத்தை வளர்த்தனர். இவ்வளவும் போதாமல், பண ஆசையால், அவனுடன் வந்திருந்த மராட்டியத் தலைவரும், பிறரும் அவனை அச்சுறுத்தினர். இத்தனை இக்கட்டுகளுடன், மைசூருக்குத் திரும்ப மனமின்றி, நஞ்சி ராஜன் சத்திய மங்கலம் என்ற இடத்திலேயே தாவனமடித்துத் தங்கினான். ஹைதர் அவனுடனிருந்து தக்க அறிவுரை, உதவியுரைகள் தந்தான்.

இச்சமயம், மைசூரின் நிலையறிந்து, மராட்டியப் பேரரசுத் தலைவனான பேஷ்வா பாலாஜி ராவ் நானா, மைசூர்ப் பகுதி மீது படையெடுத்தான். மைசூரை அடுத்த சுரா மாகாணத்தில், நவாப் திலாவர் கான் தலைவனாயிருந்தான். மராட்டியர் அம்மாகாணத்தைக் கைப்பற்றி, பலவந்த ராவ் என்பவனை, அதில் அமர்வித்தனர். திலாவர் கானுக்குக் கோலார்ப் பகுதி மட்டுமே விட்டுக் கொடுக்கப்பட்டது. மைசூர் ஆட்சிப் பகுதியிலும், அவர்கள் புகுந்து ஹைதர் படை பற்றிய கவலையின்றிச் சூறையாடினர். அரசன், அவசர அவசரமாக அமைச்சனுக்கு அழைப்பு விடுத்தும், அமைச்சன் வரவில்லை. இறுதியில், அவன் மராட்டியருக்கு ஒரு கோடி வெள்ளி கையுறை தந்து, சிறிது ஓய்வு பெற்றான். ஒரு சில படைப் பிரிவுகளை நாட்டில் விட்டு வைத்து, பேஷ்வா பூனாவுக்குச் சென்றான்.

3