பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

1750-ல் நிஜாமாகத் தவிசேறிய முசபர் ஜங் ஓர் ஆண்டுக்கு மேல் ஆட்சி செய்யவில்லை. அடுத்த ஆண்டிலேயே, நாஸிர் ஜங்கின் தம்பியான சலாபத் ஜங் என்பவன், மீர் அசப் உத்தெளலா என்ற பட்டத்துடன் நிஜாமானான். பிரஞ்சுக்காரர் உதவியுடன், அவன் ஹைதர் மீது படையெடுத்துச் சீரங்கப் பட்டணம் வரை கொள்ளையடித்தான். இவ்விடரிலிருந்து மைசூர் மீளுமுன், 1757-ல் பேஷ்வாவாயிருந்த பாலாஜி பாஜி ராவ் படையெடுத்து, மீண்டும், மீண்டும் கொள்ளையிட்டு, நாட்டைப் பாழாக்கி வந்தான். மன்னன் ஐந்து இலட்சம் வெள்ளியை, உடனடி கையுறையாகக் கொடுத்து, இன்னும் இருபத்தேழு இலட்சம் தருவதாக வாக்களித்துத் தலை தப்பினான். ஆனால், வாக்களித்த தொகைக்காக, நாட்டின் வட பகுதி முழுதும் ஈடு வைக்கப்பட்டிருந்தது. மராட்டியக் காவற் படை வீரர் ஆங்காங்கே தங்கி, மனம் போல, மக்கள் செல்வத்தைச் சூறையாடி வந்தனர்.

மைசூர் மன்னன் நாட்டை வலுப்படுத்தி, மராட்டியரை நாட்டிலிருந்து துரத்தவே விரும்பினான். இம்முறையில், அவன் தன் குடிப்படைத் தலைவர்களை ஊக்க முயன்றான். ஆனால் அவர்கள் கோழைகளாகவும், தன்னலப் பேடிகளாகவும் காலங்கழித்தார்கள். மன்னனே முன்னணியில் நின்று போரிட வந்தாலல்லாமல், தாம் படைதிரட்ட முடியாது என்றனர். செய்வகை இன்னதென்றறியாது மன்னன் திகைத்தான்.

நிலைமையைச் சமாளிக்க வல்லவன் ஹைதர் ஒருவனே என்று மன்னனை அடுத்திருந்தவர்கள் கூறினர். அதன் மீது, மன்னன் ஹைதரை அழைத்து, அவனை நாட்டின் முழு நிறை உரிமையுடைய படை முதல்வன் ஆக்கினான். மன்னனோடொத்த பொன்னணிமணி விருதுகளுடன் படைதிரட்டல்,