பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடிலன் வீழ்ச்சி

43

1761-ல் ஹைதர் ஒரு சிற்றரசின் கீழுள்ள படைத் தலைவனாக அரசியல் வாழ்க்கை தொடங்கினான். ஆனால், அன்றே அவன் புகழ், மைசூரைப் பேரரசுகளின் பிடி தாண்டிய ஒரு சிறு வல்லரசாக்க முனைந்திருந்தது. அவன் நாடில்லாத ஆட்சியாளனாக, முடி சூடா மன்னனாக, தென்னாட்டின் புகழ் வரலாற்றில் ஒரு புதிய ஏடு தொடங்கும் நிலையை அடைந்தான்.

6. குடிலன் வீழ்ச்சி

ட்சி என்பது இரண்டு பக்கமுள்ள ஒரு கொடுவாள். அதன் ஒரு புறம் கூர்மை வாய்ந்தது. எதிர்த்தோரை அடங்கொண்டு சாடுவது; அழிவு செய்வது. ஆனால், அதற்கு மற்றொரு புறம் உண்டு. அது அக்கூர்மைக்கு வலுவும், பாதுகாப்பும் அளிப்பது. அழிவைத் தடுத்து, ஆக்கத்தை உண்டு பண்ணும் நற்பக்கம் அதுவே! ஹைதரின் செயலாட்சியில், இந்த இரு பக்கங்களையும் தெளிவாகக் காணலாம். ஆனால் குந்தி ராவ் போன்றோர் ஆட்சியில், வாளின் ஒரு புறமே செயலாற்றிற்று. அவர்கள் கூரிய புறத்தால் அழிவு செய்தனர். அதனை வலுப்படுத்த, மட்டுப்படுத்தவில்லை. மொட்டைப் பக்கத்தின் அருமையை, அவர்கள் அறிய மாட்டார்கள். குந்தி ராவைத் தனக்கு மேல் உயர்த்தி விட்ட ஹைதருக்கு, இது விரைவில் அனுபவ உண்மையாயிற்று.

ஆளத் தெரிந்தவர் கையில், குந்தி ராவ் ஓர் ஒப்பற்ற ஆட்சிக் கருவியாகச் சமைந்தான். ஹைதரின் கீழ் அவன் செயலாளராக இருக்கும் போது, அவன் நிலை இதுவே. அவன் திறமையறிந்து, ஹைதர் அவனைத் தன்னிடம் வேலைக்கமர்த்தினான். குடிகள் மீது வரி விதிப்பதில்—வழுவில்லாமல் வரி