பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வெற்றிப் பாதை

53

குந்தி ராவின் சதியால் பதவியிழந்து, நாடோடியாகத் திரிந்த போது, பங்களூர் வணிகரிடம் ஹைதர் வாங்கிய கடன்களும் இப்போது தீர்க்கப்பட்டன.

குந்தி ராவின் உறவினன் ஒருவன், அவன் சார்பில் கோயமுத்தூர்ப் பகுதியிலுள்ள கோட்டைகளை ஆட்சி செய்து வந்தான். குந்தி ராவ் வீழ்ச்சியடைந்த பின்னும், அவன் கீழ்ப்படிய மறுத்தான். ஹைதர் தன் மைத்துனனான இஸ்மாயிலின் தலைமையில், ஒரு படையை அனுப்பி அக்கோட்டைகளைக் கைப்பற்றினான். சிறிய பலாப்பூர்க் கோட்டையின் தலைவன் கிளர்ந்தெழுந்தான். அவனையும், ஹைதர் தானே நேரில் சென்று அடக்கி ஒடுக்க முனைந்தான்.

உடையார் மரபினர் ஆட்சியின் கீழிருந்த பகுதி, இன்றைய மைசூர்த் தனியரசின் ஒரு பாதிக்கும் குறைவானதே என்று மேலே தெரிவித்திருக்கிறோம். அது முழுவதும், இப்போது ஹைதர் ஆட்சியின் கீழ் அமைதியுற்றிருந்தது. ஆட்சிப் பொறுப்பன்றி, இனி வேறு பொறுப்பில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டதாகவே, இச்சமயம் தோன்றிற்று. ஆனால், திடுமென வெளியேயிருந்து புதிய பொறுப்புக்கள் ஹைதரைக் கூவி அழைத்தன.

ஸலாபத்ஜங் மீர் அஸப் உத்தௌலா 1761 வரை ஆண்டான். அவன் தம்பியர் இருவரில் மூத்தவன் பஸாலத்.

அவன் ஏற்கெனவே அடோனி மண்டலத் தலைவனாயிருந்தான். ஜங்மீர் ஷுஜா உல்முல்க் வீரமும், பேரவாவும் உடையவன். இளையவன் மீர் நிஜாம் அலி கான் முந்திய நிஜாமைச் சிறைப்படுத்தி வதைத்து, பின் தானே நிஜாமாகி, 1761 முதல் 1803 வரை 42 ஆண்டுக் காலம் நீடித்து ஆட்சி செய்தான். நிஜாம் அரசுரிமையிற் பிற்பட்டுவிட்ட பஸாலத் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அடானியில் தனியாட்சி நிறுவினான். அத்துடன் தன் ஆட்சியைப் பரப்ப