60
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
அந்நூற்றாண்டில் சேரப் பேரரசு வீழ்ச்சியடைந்து, பல சிற்றரசுகளாயின. தெற்கே, வேணாடு அல்லது திருவாங்கூர், உதயவர் மரபினராலும், அதன் வடபால் கொச்சி, பெரும் படப்பு மரபினராலும், கள்ளிக்கோட்டை, சாமூதிரி மரபினராலும், வடகோடியிலுள்ள சிரக்கல், கோலத்திரி மரபினராலும் ஆளப்பட்டது. விஜயநகர ஆட்சிக் காலத்தில் புதிதாகக் கடல் வழி கண்டு, மேனாட்டுக் கடலோடி வாஸ்கோடகாமா வந்து, தென்னாட்டில் இறங்கிய பகுதி, கள்ளிக் கோட்டையே. முதல் முதல் மேனாட்டினருடன் தொடர்பு கொண்ட கீழை உலக மன்னனும் சாமூதிரியே.
மலையாளக் கரையின் மக்கள் தொகையில் பெரும் பகுதியினர், நாயர்கள். அவர்கள் போரையே தங்கள் வாழ்வாகக் கொண்ட மறக்குடியினர். 9-ம் நூற்றாண்டுக்குப் பின், புதிய இஸ்லாம் நெறியும், அராபியர் குடியேற்றமும், வட மலையாளக் கரையில் ஏற்பட்டது. அராபியரும் நாட்டுக் குடிகளும் கலப்புற்ற பின், மலையாள நாட்டு இஸ்லாமியர் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்களும், நாயர்களைப் போலவே வீரமுடையவர்களா யிருந்தனர். ஹைதர் நாட்களில், சிரக்கல் தலைவனும், அலி ராஜன் என்ற ஒரு இஸ்லாமியனாகவே இருந்தான்.
1757-ல் ஹைதர் நஞ்சி ராஜனுடன், தமிழகப்போர்களில் ஈடுபட்டிருந்தான். அச்சமயம் அவன் மலையாளக் கரையில் படையெடுத்துத் திறை பிரித்த செய்தி மேலே கூறப்பட்டுள்ளது. சாமூதிரி அரசருக்கும், பாலக்காட்டு அரசருக்கும் இருந்த போட்டி, அச்சமயம் ஹைதருக்கு உதவிற்று. பாலக்காட்டு அரசன் பணிந்து நண்பனானான். அவன் உதவியுடன், சாமூதிரி முறியடிக்கப்பட்டு, திறை செலுத்திப் பணிந்தான். ஆண்டு தோறும், திறை செலுத்துவதாகவும் இரு மன்னரும் வாக்களித்தனர். போட்டி காரணமாக, பாலக்காட்டரசன்