ஆங்கிலேயருடன் போர்
65
வலுப்படுத்த முயன்றான். அவன் காலத்தில் எவரும், இந்தக் காலங் கடந்த உயரிய நோக்கத்தை உணர்ந்தார்களில்லை. ஆனால், அவன் உரையாடல்கள், கருத்துரைகளை வெளி நாட்டுத் தூதுவர் நமக்குத் தெரிவிக்கின்றனர். அவற்றில், இந்த நோக்கம் முளைப்பதாகத் தென்படுகின்றது.
பெயரளவில் மைசூர் மன்னனாயிருந்த சிக்க கிருஷ்ண ராஜன், 1766-ல் உயிர் நீத்தான். அவன் மகன் நஞ்சி ராஜன் மன்னர் பெயருக்கு உரியவனானான். ஆனால், அச்சிறுவன் தன் ஆற்றலும், பொறுப்பும் அறியாது, வீணாரவாரங்களில் இறங்கினான். அவனைத் திருத்த முயன்றும் முடியாது போகவே, ஹைதர் அவன் அரண்மனைச் செல்வங்களைப் பறித்து, அவனைச் சிறைப்படுத்தினான். மன்னர் பொறுப்பை மட்டுமன்றிப் பெயரையும் அவன் இதன் பின் வெளிப்படையாக மேற்கொண்டு நவாப் ஆனான்.
இச்செயல் மூலம் ஹைதர் மீண்டும் பேஷ்வா மாதவ ராவின் சீற்றத்துக்கு ஆளானான். பேஷ்வாவின் பெரும் படை மைசூரை நோக்கி முன்னேறிற்று. பேஷ்வாவுடன் நிஜாமும், படையெடுப்பில் சேர்ந்து கொள்வதாக ஒப்புக் கொண்டான். ஹைதர், ஆர்க்காட்டு நவாபின் தமையனான மகுபூஜ் கானைத் தூதராக அனுப்பிச் சந்தித்துப் பேச முயன்றான். பேஷ்வாவின் சீற்றம் மாறவில்லை. படைகளின் வரவைத் தடுக்க, ஹைதர் பல தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டான். வழி எங்கும் அணைகளை உடைத்து வெள்ளக்காடாக்கினான். பாதைகளைப் பாழாக்கினான். எல்லைப் புறங்களில் உணவுப் பொருள்கள் கிடைக்காதபடி, அவற்றைத் தூர்த்தான். ஆனால், பேஷ்வாவின் பெரும்படையை இவை நீடித்துத் தடைப்படுத்த முடியவில்லை.
மராட்டியர் சுரா மாகாணத்தை அடைந்தனர். மாகாணத் தலைவன் மீர் அலி ரஸா கான் ஹைதரின் மைத்-
5