ஆங்கிலேயருடன் போர்
71
போன்ற நிஜாம் படைகளுடன் இணைந்து நின்ற போது, கிட்டாத வியத்தகு வெற்றிகள் அதன் துணை அகன்ற பின்னரே, ஹைதருக்குக் கிட்டின. கிட்டத்தட்ட வடதமிழக முழுவதும், அவன் வாள் போல் சுழன்று சுழன்று சென்று, முகமதலியின் வலிமை மிக்க கோட்டைகள் பலவற்றையும் கைப்பற்றினான். ஆங்கிலேயர் உதவிப் படைகள் எதுவும், இடம் விட்டு இடம் பெயர முடியாமல், அவற்றை அவன் சிதறடித்தான். இரண்டாண்டுகள் ஆங்கிலேயர் போக்குவரவு முற்றிலும் கடல் வழியாகவே நடந்தது. கரையாதிக்கம் முழுவதும் ஹைதர் படைகளின் வசமாயிருந்தது.
பண்டைத் தமிழரசுகளைப் போல், ஹைதரிடம் கடற்படையும் இருந்திருந்தால், மைசூர்ப் போருடன் ஆங்கில ஆட்சிக்கு ஒரு முடிவு ஏற்பட்டிருக்கும்!
ஹைதர் மேல்திசையிலிருந்து திரும்புவதற்குள், ஹைதர் வென்ற தமிழகப் பகுதி முழுவதையும் மீட்டு விட, ஆங்கிலேயர் பெரு முயற்சிகள் செய்தனர். அதற்காகவே, ஹைதரின் எதிரியாகிய குத்தி மராட்டியத் தலைவன் மொராரி ராவையும் அவர்கள் பணம் பேசி வரவழைத்தனர். ஆனால், அவன் படைகள் வந்து சேருவதற்குள், ஹைதர் மின்னலெனத் தமிழக எல்லையுள் குதித்தான்.
இந்துஸ்தானியில் ‘புலி’ என்ற பொருளுடைய ‘ஹைதர்’ என்ற சொல் மலையாளிகளிடையே ‘புலி’யால் நேர்ந்த கிலியையே தந்திருந்தது.1768-ம் ஆண்டில் ஆங்கிலேயருக்கும் அது, அதே கிலியை உண்டு பண்ணிற்று. மேலைநாட்டில் 19-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், அழுகின்ற ஆங்கிலக் குழந்தைகளிடம் ஆங்கிலத் தாய்மார்கள், ‘நெப்போலியன்’ பெயரை மெல்ல உச்சரிப்பார்களாம். குழந்தைகள் உடனே வாய்ப் பொத்தி நடுங்கி விடுமாம்! கீழ் திசையில் ஹைதர் பெயர் உச்சரித்து ஆங்கிலக்