பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

74

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

போரின் கடைசி ஆங்கிலப் படைத் தலைவன் ‘புரூக்’ ஹைதர் முன் மண்டியிட்டு நின்று, சமரச ஒப்பந்தம் கோரினான். ஹைதரும், ஆங்கிலேயர் வகையில் எதையும் பெருந்தன்மையுடன் விட்டுக் கொடுக்கச் சித்தமாகவே இருந்தான்.ஆனால், நம்பிக்கை மோசக்காரனான முகமதலிக்கு மட்டும் எதுவும் விட்டுக்கொடுக்க முடியாதென்று பிடிமுரண்டு செய்தான். ஹைதர் பறங்கிமலையிலிருந்து ஒரு படைப் பிரிவுடன் வந்து, சென்னையைச் சூறையாடுவதாக அச்சுறுத்திய பிறகுதான், ஆங்கிலேயர் அவன் கூறியபடி ஒப்பந்தம் செய்ய இணங்கினர்.

இந்த ஒப்பந்தம் 1769-ல் நிறைவேறிற்று.

இவ்வொப்பந்தப்படி ஹைதரும், ஆங்கிலேயரும் எல்லாப் போர்களிலும், தமக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்ய வேண்டும் என்று வாக்களித்தனர்.

இந்த வாக்குறுதியை, ஆங்கிலேயர் என்றும் காப்பாற்றியதில்லை. அச்சத்திலும், கிலியிலும் அளித்த வாக்குறுதி, ஒழுக்க முறைப்படி செல்லாது என்றுதான் அவர்கள் இதற்கு விளக்கம் கூறினர்!

9. புலியின் பதுங்கலும் பாய்தலும்

மைசூரின் அரசியல் பொறுப்பை, ஹைதர் ஏற்பதற்கு முன்னிருந்தே, மைசூரின் அமைதிக்கு மராட்டியப் பேஷ்வா மரபு ஒரு பெரிய வில்லங்கமாய் அமைந்தது. ஹைதரின் ஆட்சியில், மைசூர் செல்வ வளம் கொழித்த நாடாக வளர்ந்து வந்ததே, இதற்குக் காரணம். இச்செல்வம், கொள்ளைப் பேரரசாகிய பேஷ்வா கால மராட்டியத்தின் பண ஆசையைத் தூண்டிற்று. தம்முடன் ஒத்த பேரரச-