78
கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி
கோட்டைக்குப் பின் வாங்கிச் செல்லும்படி ஹைதர் கட்டளையிட்டான். ஆனால், வழியில் ஒரு துப்பாக்கி தற்செயலாக வெடித்ததனால், இரகசியம் எதிரிகளுக்குத் தெரிந்து விட்டது. வழியில், முத்தேரி என்ற ஓர் ஏரிக் கரையில், எதிரிகளின் பீரங்கிகள் இருந்தன. இப்பீரங்கிகள் ஒரு புறமும், பின் தொடரும் மராட்டியப் படை ஒரு புறமும் முத்தேரியைக் கூற்றுவன் களமாக்கிற்று. படைகள் சீரங்கப்பட்டணத்துக்கு ஐந்து கல் வடக்கிலுள்ள சர்க்கூலி மலையை அணுகியதும், மராட்டியக் குதிரைப் படையினர் படைகளைத் தாக்கினர். அணிகள் கலைந்து சிதறின. அழிவும் சித்திரவதையும் தொடங்கிற்று. ஒவ்வொருவரும், உயிருக்கு அஞ்சி தனித் தனி வேறு வேறு திசையில் ஓடத் தலைப்பட்டனர்.
ஹைதர் ஒரு புறம் தனியாகத் தப்பிப் பிழைத்து ஓடிச் சீரங்கப்பட்டணம் சென்றான். அதே சமயம், திப்புவை எங்கும் காணாத கவலை, ஓடியவர் உள்ளங்களில் புயலிடையே புயல் வீசிற்று. மறுநாள் ஆண்டியுருவில் திப்பு தப்பி வந்த பின்தான், அவர்களுக்கு உயிர் வந்தது.
அழிவிலும் அருஞ் செயல் செய்து புகழ் பெற்றவர், ஹைதர் தரப்பில் இரண்டே இரண்டு பேர்கள்தான். ஒருவன் படைத்தலைவன் பஸ்ஸுல்லா கான். அவன் ஒரு சிறு பிரிவுடன், எதிரிகளின் அணிகளையே பிளந்து கொண்டு, தன் அணி குலையாமல், சீரங்கப்பட்டணம் வந்து சேர்ந்தான். ஹைதர், தன் அவமானத்தைக் கூட மறந்து, அவனை ஆரக் கட்டித் தழுவிக் கொண்டான்.
சர்ச் கூலி மலைப் போரில், பெரும் புகழ் நாட்டிய மற்றொரு வீரன் யாஸின் கான் என்பவன். அவன் உருவிலும், தோற்றத்திலும் ஹைதரைப் பெரிதும் ஒத்திருந்தான். மைசூர்ப் படைகள் ஓடத் தலைப்பட்ட போது, எதிரிகள்