பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியின் பதுங்கலும் பாய்தலும்

79

குறிப்பாக, ஹைதரைக் கைப்பற்ற எங்கும் திரிந்து கொண்டிருந்தனர். தன் அரசனைக் காக்க, யாஸின் கான் ஒரு சூழ்ச்சி செய்தான். அவன், தானே ஹைதர் என்ற முறையில் கூக்குரலிட்டு, நடிப்புக் காட்டினான். சூழ்ச்சி பலித்தது. மராட்டியர் அவனே ஹைதர் என்று எண்ணிப் பலத்த காவலுடன், அவனைக் கொண்டு சென்றனர். திரியம்பக் ராவ் அவனையே ஹைதரென்று நினைத்து, அவனை மதிப்புடனும், அன்புடனும் நடத்தினான். துன்ப காலத்தில், அவன் நட்பைப் பெற்று அவனைத் தன் வசமாக்கி விட, அரும்பாடு பட்டான்.

ஹைதர் சீரங்கப் பட்டணத்தில் இருந்து, அடுத்த போராட்டத்துக்கு ஆள் திரட்டுவது கேட்டதும், மராட்டியப் படைத் தலைவன் தான் ஏமாற்றமடைந்ததற்கு வெட்கி, யாஸின் கானை விடுதலை செய்தான்.

மேலுக்கோட்டை பேர் பெற்ற புண்ணியக் கோயில். தென்கலை வைணவரின் தலைமைத் திருப்பதிகளில் அது ஒன்று. ஆகவே, அதன் செல்வ வளம் பெரிதாயிருந்தது. வெறி கொண்ட மராட்டியர், அச்செல்வத்தை நாடி, ஒருவர் மீதொருவர் விழுந்தடித்துச் சென்று, அதைக் கொள்ளையிட்டனர். கிடைத்த உணவுப் பண்டங்களை உண்டு, குடித்து ஆடினர். தேர்களையும், விதானங்களையும் கொளுத்தினர். இச்செயல், ஹைதருக்குத் தலைநகரின் காவல் ஏற்பாடுகளுக்குரிய போதிய கால வாய்ப்புத் தந்தது. தவிர, வைணவர் கோயிலைக் கொளுத்திய இந்து மதக் கொடியோர்களை எதிர்க்க மக்கள் திரள் திரளாக முசல்மான் வேந்தன் கொடிக் கீழ்த் திரண்டனர். ஆகவே, தலைநகரை திரியம்பக ராவினால், என்றும் முற்றுகையிட்டுப் பிடிக்க முடியாமலே போய் விட்டது.

நாட்டின் பெரும் பகுதியைக் கை வசப்படுத்திக் கொண்டு, மராட்டியர் மாதக் கணக்காய்ச் சீரங்கப்பட்டணத்தை