பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

1776-ல் அரசிளஞ் சிறுவன் சாம்ராஜ் இறந்தான். திறமையற்ற அரசரே, மீண்டும் மீண்டும் வருவது கண்டு, ஹைதர் சலிப்படைந்து, அடுத்த அரசுரிமையாளனைத் தேர்வதில், ஒரு புதுமை வாய்ந்த முறையைக் கையாண்டான். ஒரு மாளிகையில், பலவகை விளையாட்டுப் பொருள்களை வரிசைப்படுத்தி வைத்தான். அரசர் குடிச் சிறுவர்களை அங்கே திரட்டி, அவரவருக்கு வேண்டிய பொருள்களை எடுத்துக் கொள்ளும்படி கோரினான். தின்பண்டங்களையும், ஆடையணிகளையும், இன்ப ஊர்தி வகைகளையுமே எல்லோரும் தேர்ந்தெடுத்தனர். ஆனால், சாமராஜன் என்ற சிறுவன் மட்டும், அங்கிருந்த ஓர் அழகிய மணி பதித்த வாளைத் தேர்ந்தெடுத்தான். “ஆம்! இவனேதான் உண்மையான அரசன்!” என்று கூறி ஹைதர், அவனை மகிழ்வுடன் தன் அன்புத் தவிசில் ஏற்றினான்.

‘ஹைதர் அரசுரிமை விரும்பி, மன்னனாகவில்லை; மன்னர் குடியினரின் திறமையின்மையும், நாட்டின் தேவையும் கண்டு மன்னனானான்’ என்பதை இந்நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

சிறுவன் சாமராஜன் காட்டிய ஆர்வம், ஹைதர் கண் காணப் பலிக்கவில்லை. ஆனால், அவன் கூரிய மதியார்வம் தவறானதன்று. அச்சிறுவனின் பிள்ளையான கிருஷ்ணராஜ உடையாரே, பின்னாட்களில் 68 ஆண்டுகள் மைசூரை ஆண்டு, அதை வளப்படுத்தியவன் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹைதரின் அடுத்த வெற்றி, பெல்லாரி வட்டத்தைச் சார்ந்தது. அதன் ஆட்சியாளன், பஸாலத் ஜங்கின் மேலாட்சியை உதறித் தள்ள விரும்பினான். பஸாலத் ஜங் அவனை அடக்க, பிரஞ்சுப் படைத் தலைவன் லாலியை அனுப்பினான். ஆட்சியாளன் ஹைதரின் உதவியை நாடினான். ஆனால், உதவி நாடியவன் கூட எதிர்பாராதபடி அவ்வளவு விரைந்து