பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலியின் பதுங்கலும் பாய்தலும்

83

ஹைதர் பெல்லாரி சென்றான். லாலியின் படை முற்றுகையிடு முன், ஹைதர் உள்ளே சென்று, போரில் லாலியை முறியடித்தான். அவன் படைகளைச் சிதறடித்தழித்தான். படைத் தலைவன் லாலி, தலை தப்பியது தம்பிரான் புண்ணியம் என்று பிழைத்தோடினான்!

அடிக்கடி, மைசூரின் எதிரிகளுக்கு உதவியவன், குத்தியை ஆண்ட மராட்டிய வீரன் மொராரி ராவ். அவனைத் தண்டிக்க எண்ணி, ஹைதர் அவனிடம் பெருந்திறை கோரினான். அவன் மறுக்கவே, குத்தி முற்றுகையிடப் பட்டது. கோட்டையில் நீர் இல்லாத நிலையில், மொராரி ராவ் கோட்டையை விட்டு விடுவதாகக் கூறினான். ஆனால், அன்றிரவே மழை பெய்ததால், அவன் கூறியபடி நடக்கவில்லை. மீண்டும் நீர் வற்றி, மொராரி ராவ் முன் போல், பணிய முனைந்த போது, ஹைதர் அதனை ஏற்றுக் கொள்ளாது, கோட்டையை அழித்தான். அவனைச் சிறைப்படுத்திக் கபால் துருக்கத்தில் காவலிட்டான். குத்தி மைசூர்ப் பேரரசைச் சார்ந்த ஒரு பகுதியாயிற்று.

புதிய பேஷ்வாவான ரகோபாவுக்கு எதிர்ப்பு மிகுதியாயிருந்தது. தன்னைப் பலப்படுத்திக் கொள்ள, அவன் ஹைதர் நட்பை நாடினான். தான் தர வேண்டும் திறையை, ஆறுலட்சமாகக் குறைக்கும்படி தூண்டி, ஹைதர் அவனைப் பேஷ்வாவாக ஏற்று, இணக்கமளித்தான். இது உண்மையில் ரகோபாவின் நிலையை உயர்த்திற்று. ஏனெனில் ஹைதர் பக்கமே ரகோபா சாய்ந்து விடக் கூடாதென்று எண்ணிய பம்பாய் ஆங்கில ஆட்சியாளரும், அவனை ஏற்று, ஒப்பந்தம் செய்து கொண்டனர். ரகோபாவுக்கெதிரான எதிர்ப்பு வலுக் குறைந்தது. இம் மகிழ்ச்சியால், கிருஷ்ணா ஆறு வரையுள்ள மராட்டியப் பகுதியை எடுத்துக் கொள்ளும்படி ரகோபா ஹைதருக்கு முடங்கல் வரைந்தான். ஹைதர் இந்த வாய்-