பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி

ஹைதரைக் காட்டிக் கொடுக்க முனைந்த போலி மரபுகளில் மராட்டிய மரபு ஒன்று உண்டு. அது சிவாஜியின் வீர மராட்டிய மரபன்று. அம் மரபின் அரியாசனத்தைக் கவர்ந்து, அதனைத் தன் நரியாசனமாக்கிக் கொண்ட பேஷ்வா மரபு. ஆயினும், அம் மரபு கூட ஹைதர் காலத்துக்கு நெடு நாட்களுக்குப் பின், தன் மாசு கழுவ முற்பட்டது. ஹைதர், கட்டபொம்மன் ஆகியவரின் புகழ் மரபுக் கொடியை அம்மரபின் கடைசித் தோன்றலான நானாசாகிப் சில காலம் வானளாவப் பறக்க விட்டான். இதன் மூலம், அவன் தன் முன்னோர் மாசகற்றி, சிவாஜியின் வீர மரபுக்கு மீண்டும் ஒளி தந்தான்.

மாநிலத்தின் விடுதலையை மதிக்கவில்லை, மாநிலத்தில் அடிமையாட்சி பரப்பிய ஆங்கில அரசியலார். 1857-ம் ஆண்டு வீசிய விடுதலைப்போரின் ஒரு பேரலையை அவர்கள் ‘சிப்பாய்க் கலகம்’ என்று கூறி நையாண்டி செய்தனர். மத வெறி கொண்டவர்களின் மட எதிர்ப்பென்று அதை அவர்கள் தட்டிக் கழிக்கப் பார்த்தனர். ஆனால், விடுதலை வரலாற்றாசிரியர்களில் தலை சிறந்தவர், மராட்டிய திலகம் வீரசவர்க்கார். ‘எரிமலை’யாய் மூண்டு வெடித்த பெரும் போராக அதைத் திரட்டிக் காட்டினார். விடுதலைப் புதுப் பயிர் வளரும்படி, மாநிலமெங்கும் வெடித்துச் சிதறி, விதை தூவிய நெற்றாக அதைச் சித்தரித்துக் காட்டினார். ஆனால், விடுதலைப் பயிருக்கான விதைகளைச் சிதறடித்த காட்சியுடன், அவர் ஆராய்ச்சி நோக்கு நின்று விட்டது.

விடுதலை விதை தந்த கொடி விளைவுற்றது மராட்டியத்திலேதான். அதை வீரசவர்க்கார் திறம்படச் சுட்டிக் காட்டுகிறார். அவர் தாயகமாகிய மராட்டியத்தின் பெருமை அது. சிவாஜியின் வீர மரபு விளங்கிய இடம். அது என்பதையும் அவர் மறக்கவில்லை. ஆனால், மராட்டியத்தில்