பக்கம்:கன்னட நாட்டின் போர்வாள் ஹைதர் அலி.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைப் போராட்டம்

87

மூலம் 1779-ம் ஆண்டு, பேரரசின் முழு நிறைவிழா ஆண்டாக மாறிற்று.

ஹைதர் மீர் முகமது சாதிக் என்ற இஸ்லாமியப் புலவனைப் பொருளமைச்சனாக நியமித்தான். சாமையா என்ற வீர பிராமண மரபினனைத் தன் உள்நாட்டுக் காவல் படைத் தலைவனாக்கினான்.

தென்னாடெங்கும், இப்போது ஹைதர் புகழ் பரந்தது. தொலை அயல் நாடுகளிலிருந்து வணிகர், குதிரைகளையும், விலையுயர்ந்த பொருள்களையும் விற்க, மைசூரை நாடி வந்தனர். அவர்களுடனே வீரர், புலவர், அறச் சிந்தனையாளர் ஹைதரிடம் அலுவல் நாடியோ, பரிசில் அளாவியோ, உலக நலத் திட்டங்களில் உதவி கோரியோ, மைசூர் வந்து குழுமினர். சூழ்நிலையும், வரலாறும் ஹைதரை மேலும் இயக்கியிராவிடில், ஹைதரின் மீந்த ஆட்சிப் பகுதி அவனை ஒரு அசோகனாக, அக்பராக, ஹாரூன் அல்ராஸ்சிடாக, குலோத்துங்க சோழனாக மாற்றியிருக்கக் கூடும் என்று திடமாகக் கூறலாம். ஆனால், மாறிய நிலையிலும் 1779-ஆம் ஆண்டு, இத்தகைய ஒரு ஆட்சியின் சிறு பதிப்பாகவே காட்சியளிக்கின்றது.

1780-ஆம் ஆண்டுக்குள், மைசூர், நிஜாம், மராட்டியர் ஆகிய மூன்று பேரரசுகளையும் ஆங்கிலேயர் ஒருங்கே புண்படுத்திப் பகைத்துக் கொண்டனர். ஆயினும், ஹைதர் தம்முடன் இல்லாமல், மற்ற இரு அரசுகளும் போரில் இறங்க விரும்பவில்லை. ஹைதரோ, மற்ற இருவரையும் நம்பிப் போரில் இறங்கத் துணியவில்லை. இந்நிலை 1780-உள் நீங்கிற்று. பிறர் சேர்ந்தாலும், சேரா விட்டாலும், ஆங்கிலேயர் மீது போர் தொடுத்தே தீருவது என்று அந்த ஆண்டில் ஹைதர் துணிந்தான். ஆனால், அதே ஆண்டில்,