பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குள்ளே இன்னொரு நாடகம்! - அவ்வளவுதான்!. மற்றப்ப்டி, இதிலே குதோ, தந்திரமோ கிடையவே கிடை யாதுங்க! - நான் உங்களைத் திரிகரணசுத்தியோ ட காதலிச் சவன்; காதலிக்கிறவன் என்கிற தருமச் சத்தியத்தை மதிச்சும் நம்பியும் நல்ல வாக்குக் கொடுத்தீங்கன்னா, என்னைப் பெற்றவங்க கடைசி நிம்மதி அடைகிறதோடே, நான் அதிர்ஷ்டசாலியாகி முதல் நிம்மதியை அடையவும் முடியும், பார்வதி!' - செந்திலின் பேச்சு தழதழத்தது. "சமூக அநீதியான வரதட்சணைக் கொடுமைகளுக்கு எதிர் நீச்சல் போட்டு வீரத்தமிழச்சியாகத் தலைநிமிர்ந்து நிற்கக் கங்கணம் கட்டிக்கிட்டு இருக்கிற உங்களுக்கு நானே வரதட்சணைக் கொடுத்துக்கூட மனசுக்குள்ளே ஆசைப் பட்டதும் உண்டு! ஏன், நானே உங்களுக்கு வரதட்சணை யாகவும்கூட திட்டமிட்டிருந்தேன்!' பேச்சு நின்றது. மோகினிப் பதுமையென நின்றாள் பார்வதி. நேரம் சோதிக்கிற நேரத்திலே நீங்களும் சோதிச் சிடாம, சீக்கிரத்திலே நல்ல வாக்குத் தாங்க, பாரு!' பாசத்தின் வெறியில் சத்தமிட்டான் செல்லப்பிள்ளை. 'உங்க அன்பு மகத்தானது! மனிதாபிமானம் மிகுந் தது!... உங்க இஷ்டப்படி நடப்பேனுங்க; இது உங்களுக்கு உண்டான கடமை மாத்திரம் இல்லே; எனக்கு வாய்ச்சிருக் கிற சோதனையான புண்ணிய கடமையும்தானுங்க!’’மேனிச் சிலிர்ப்பு அவளுக்கு இன்னமும்கூட அடங்க வில்லை. உச்சி வெளிச்சம் கூடத்தை உச்சி மோந்தது. செந்திலின் உந்திக் கமலத்தினின்றும் புறப்பட்ட ஆனந்தச் சிரிப்பு அவன் இதழ்களில் மாவுக்கோலம் வரை கிறது. "ஜரிகைப் பட்டு, ப்ளவுஸ் எல்லாத்தையும் பாத்ரூ, முக்கு எடுத்துப் போங்க, உள்பக்கம் நல்லாவே நாதாங்கி; யைப் போட்டுக்கங்க; நொடியிலே, திருமணப் பெண்ணாக வேல்ம்போட்டுக்கங்க, அந்த மாலைகளிலே ஒண்ணை எடுத்

蚤森

110