பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நான் மாத்திரம் இதையெல்லாம் வச்சுக்கினு: என்னங்க செஞ்சிடப் போறேன்?’’ செந்திலுக்கு முகம் சிறுத்தது. சற்றே நகர்ந்தான்: சிகப்பு நிறத்திலே எச்சரிக்கை செய்த பொத்தானை அழுத்தினான். பார்வதிக்கு இருப்புக் கொள்ளவில்லை, அங்கே. செந்தில் ஏதோ சிந்தனையில் நெற்றியைத் தேய்த்துக் கொள்கிறான். இரண்டு கோப்பைகளிலே காப்பி வந்தது. கோப்பைகளை எதிர்கொண்டு ஏந்தினாள் பார்வதி; ஒன்றைச் செந்திலிடம் நீட்டினாள். 'எதுவுமே எனக்குச் சூடாக இருந்தாகணும்; நீங்களும் குடிங்க' என்று சொல்லிக் கொண்டே காப்பியை ருசித்துச் சுவைத்தவன், திடீரென்று தலையை உயர்த்தி, ஆயா, இவங்கதான் பார்வதி. என்றான். 'இவங்க பார்வதி இல்லே, தம்பி. எங்க வீட்டு மருமகப் பொண்ணாக்கும்!” பார்வதியின் கைக்கோப்பை நடுங்குகிறது; விழிகளிலே சலனம், 'ஆயா, இந்தாங்க கப்!” செந்திலின் எச்சில் கோப்பையை வாங்கிக் கொண்ட வளோ, பார்வதி. அவள் கைப்பட அதை ஆய்ாளிடம் கொடுத்தாள். மிஸ்டர் செந்தில், வழக்கம் போல இனிமே நான் வெறும் பார்வதிதான்!” என்று தெரியப்படுத்தினாள், ஓ.கே. என்றான் செந்தில், மிஸ் பார்வதி, நான் உங்களை இனி எப்போது சந்திக்கலாம்: கேட்டான். "எப்போது வேணும்னாலும் சந்திக்கலாமே!’

J.14

114