பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பி ராமையா பேசினான்.

காற்றடித்துத் தீக்கணப்பிலே விழுந்துவிட்ட உயிர்ப் பூவாகத் துடிக்கிறாள் பார்வதி; விதியின் சவாலுக்கு எதிர்ச் சவால் விடுக்க முடியாத ஆற்றாமையில், வேதனையில், நெட்டுயிர்ப்பில் விம்முகிறாள்: பேசுகிறாள்: "அழா தேப்பா, தம்பி, அழாதே! நீ நூறு எண்ணுறதுக்குள்ளாற, நான் நம்ம வீட்டிலே வந்து நின்னுடுறேன், பாரேன் ராமையா, நம்ம அம்மாவையும் அப்பாவையும் நீதான் பத்திரமாகப் பார்த்துக்கிட வேணும் பயப்படாதேப்பா: அப்பா அம்மாவுக்கு ஒண்னுமே ஆயிடாது. எதுக்கும் மூணாவது வீட்டு சீதாப்பாட்டியைத் துணைக்கு வந்து இருக்கச்சொல்லேன்!...” தோழிகளிடமும் விவரம்சொல்வி விட்டுத் துயரத்தை வெளியிலே காட்டிக் கொள்ளாமல், சமர்த்தாகவே புறப்பட்டாள் பார்வதி!

118