பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தக் குடும்பமே பொழுதுபோக்காகத் துணை நிற்பதும் நடைமுறைதான். சே! என்ன ஜன்மம். என்ன வாழ்க்கை1 பார்வதிக்கு இருப்புக் கொள்ளல்ைலை. இருப்புக்கு எங்கே போவாள் அவள்? காப்பி மணக்கி تالي 0ليl. பார்வதி தயாரிக்கும் காப்பியின் முதல்மரியாதை அம்மா சிவகாமிக்குத்தான் கிடைக்கும். பெற்றவளின் படுக்கையை நோக்கி நடந்தாள். அவளுக்கு அவளே சுமை, யாக ஆகிவிட்ட மாதிரியான ஒர் உணர்வு மறுபடி கிளர்ந் தெழுந்தது. இப்படிப்பட்ட பரிட்சை நேரங்களில் அவள் தனக்குத்தானே சிரித்துக் கொள்வது வழக்கம்: பழக்கம், வள்ளுவத்தின் விதியை மீறக் கூடாதுதான் ! அரைக் கணம் அம்மாவை ஊடுருவினாள், குடும்பத்தில் இன்னம் மிச்சம் மீதம் இருந்த பாதிப் பாரத்தை நல்ல நேரத்தில், நல்ல படியாகக் கழித்து வைக்க வேண்டிய பொறுப்பான கடமை யின் ஆதங்கம் அம்மாவின் வெளுப்பேறிய முகத்தில் துல்லித மாகவே தெரிந்தது. "எங்க பாரு குட்டியையும் மனித நேசமுள்ள அன்பான இடத்திலே கட்டிக் கொடுத்திட்டா, என்னோட மனச் சுமை முழுசாவே கழிஞ்சிடும் : நானும் உடம்புதேறி ஓடியாடி நடமாட ஆரம்பிச்சி விடுவேன்; அப்ப றம் எங்களுக்குக் கவலை ஏது ? கஷ்டம் ஏது ? நாங்க நினைக்கிற மாதிரியே. எல்லாம் தெரிஞ்ச ஆண்டவனும் தினைச்சால்தான். நாங்க நல்லதனமாகத் தப்பிக்க முடியும்: எங்க குடும்பமும் நல்ல படியாகத் தப்பிப் பிழைக்க முடியும். வயசுக்கு வந்திட்ட பெண்ணை நாலைஞ்சு வருஷத்துக்கு மேலேயும் வீட்டுக்குள்ளே போட்டுப் பூட்டி வச்சிருந்தா ஊர் உலகமும் ஜாதி சமூகமும் ஏசாதா, என்ன? - அப்பா வின் தலைகாட்டில் குந்திக்கொண்டு பரம ரகசியமாக் அம்மா ஒதியது நேற்றுச் சொன்ன மாதிரி இருக்கிறது : னம் விளைந்த சடுதியில் சாத்தியும் விளையவே, சமன்

16

16