பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உங்களுக்குக் காட்டப் போறேனுங்க! என் பின்னாலே வாங்க!' என்றாள். தம்பிமார்களையும் கூப்பிட்டுக்கொண் டாள். நடை வளர்கிறது. ஏழைமை பூத்துக் குலுங்கிய மிகச் சிறிதான நடுக் கூடத்திலே, மிகப் பெரிதான மனித உயிர்ச் சடலங்கள் இரண்டு ஜோடி சேர்ந்த நிலையிலேயே விதியாலோ வினையாலோ நெஞ்செலும்புகள் நொறுங்கிட அடித்துப் போடப்பட்ட மாதிரி. பேச்சு மூச்சு இல்லாமலும் நெஞ்ச டைப்பு நோயும் கிழிசல் பாயுமே கதியென்றும் சதமென்றும் போட்டது போட்டபடி கிடக்கிறார்கள்! பாரு! விம்மினான் செந்தில் நாதன். ப ா ர் வ. தி அதிசயமாக ஆறுதல் அடைகிறாள். செந்திலைத் துருவினாள்; பார்த்தாள்; பார்வையிட்டான்: பகலிலே நான் உங்களுக்குச் செஞ்ச உபகாரத்துக்குப் பிற் பகலிலே நீங்க எனக்குப் பிரதி உபகாரம் செஞ்சா, அதிலே என் மனசு அபிமானமான எந்தவகை ஆறுதலையும் கானாது; என் மனசு அப்படி, ஆகச்சே, நீங்க எனக்குச் செய்யப்போற செய்யவேண்டிய உதவி முதல் உதவி யாகவே இருக்கணும். சரிதானே? சொல்லுங்க, செந்தில் 1’’ வேண்டினாள். 'உங்க இஷ்டம்...” ஒ. கே!...இங்கேயும் ஒரு திருக்கல்யாணம் நடக்கப் போகுதுங்க, நீங்க இரண்டாவது தடவையாகவும் மாப் பிள்ளை வேஷம் போடப் போlங்க; நானும் இரண்டாவது முறையாக மணப்பெண் கோலம் ஏந்திடப் போறேனுங்க! "ஷஅட்டிங்கிலே நடக்கிறமாதிரி, எல்லாம் டக்டக்’னு டக்க ராவே நடந்தாகணுமுங்க!' 'ஒ.கே!... என்னை உங்களுக்கு மாப்பிள்ளையாக

126

126