பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிலை அடைந்தாள் பார்வதி. 'அம்மா !” என்று குரல் எழுப்பி, சூடான காப்பியோடு சிவகாமி அம்மாளை எழுப்பினாள். 'அம்மாடி கமலி!' அம்மா வாரிச்சுருட்டிக் கொண்டு எழுந்தாள். நேருக்கு நேராகபார்வதி மோகினிச் சிலையாக நின்று கொண்டி ருநதாள. 'காப்பி போட்டுக் கொண்டாந்திட்டியாம்மா ?" "ஆமாம்மா !” 'பாரு குட்டின்னா. பாருக் குட்டியேதான் !' 'சரி, சரி; எந்திரிச்சு வாயைக் கொப்புளுச்சிட்டு, சூடு ஆறுறத்துக்குள்ளாற காஃபியைக் குடி, அம்மா !” 'ஆகட்டும், பார்வதி' பார்வதிக்கு வாயெல்லாம் பல்; பல்லெல்லாம் குறுமபு:நகை. அம்மா இனி இயந்திரம் ஆகிவிடுவாள் ! தஞ்சா ஆரில் விடிந்ததும் விடியாததுமாகவே கீழவாசல் கடைவீதி அமர்க்களப்பட ஆரம்பித்து விடுகிற மாதிரி ஆகிவிடும் இந்த வீடு !.

பார்வதிக்குச் சிரிக்கவும் தெரியும்!

17