பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தான். அவன் நெஞ்சு குலுங்கினால் என்ன? அவன் குலுங்க மாட்டான்: குலுங்கவே மாட்டான்!-அவளைக் கைத் தலம் பற்றினான் ! பார்வதியின் விழிகள் பிதுங்கின. செந்திலுக்கு-என் கெந்திலுக்கு என்ன ஆச்சு? மனமும் மனச்சாட்சியும் குலுங்கின. மெளனத்தின் ஊமைத்தனமான நாடகம் போதும்: போதும்! - "பார்வதி, விடை கொடு!" ' விடை கொடுக்கவா? நீங்க இன்னும் கேள்விம்ே கேட்கலையே, செந்தில்?’’ அவனுக்குச் சிரிக்கத் தெரியவில்லை. அவளுக்கு அழத் தெரியவில்லை. "அதோ பார், பார்வதி!..கேள்வி வருது' ஆச்சரியக் குறியாகக் காவல் துறை அதிகாரி வந்தார்: நின்றார். வணக்கங்க, என்றான் செந்தில், நான்தான் பிரபல பாங்கர் பரந்தாமனின் செல்வ மகன்; உங்களுக்கு ஃபோன் பண்ணினதும் நானேதான்!” சேதி சொன்னான். ரத்தம் உறைய, உருக்கத்தோடும் ஏக்கத்தோடும் செந்திலை தனக்கு தாலிப் பாக்கியத்தைக் கருணையுடன் வழங்கிய செந்திலை நன்றியுடன் ஊடுருவிப் பார்த்தாள் பார்வதி. காக்கிச் சட்டை, காலத்தைப் பார்த்தது: செந்திலோ, பார்வதியைப் பார்த்தான். "மிஸ்டர் செந்தில்!”

139

139