பக்கம்:கன்னித்தொழுவம்.pdf/136

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நல்லவிளக்கு இன்னமும்கூட எரிந்து கொண்டிருக் கிறது! பார்வதிக்குத் திரும்பவும் சொல்லுகிறான் செந்தில்: 'பார்வதி ! இப்போதைக்கு நான் சட்டத்தின் குற்ற வாளிதான்; ஆனாலும், உண்மையான நடப்பை நீயும் தெரிஞ்சுக்க வேண்டாமா?... சமூக சேவகி என்கிற பொப் யான சமூக அந்தஸ்தை நிழலாக்கிக்கிணு, திரை மறைவிலே விபச்சார விடுதி ஒன்றையும் ரொம்பக்காலமாக நடத்திட்டு வந்த மாதங்கியைப் பற்றி நம்ம முருகையன் மூலம் உனக்குத் தெரிஞ்சிருக்கும்; மாதங்கி என்க்கு முறைப் பெண் என்பது பொய் இல்லை; எனக்கு வாழ்க்கைப்படுறதுக்காகப் ப்ரேதப் பிரயத்தனம் செஞ்சவங்களிலே, உன் சிநேகிதி தாராவைப் போல, என் அம்மான் மகள் மாதங்கியும் ஒருத்தியாக இருந்தாள் என்கிறதிலேயும் தப்பு இல்லை தான் 1-ஆனாலும்,தன்னோட காதலுக்குக் குறுக்கே நின்ன யாரையும் தன்னோட கபட வலையிலே சிக்க வைக்காமல் தப்பி விடச் செய்யறதுக்கு அவள் ஒப்பினதே கிடையாது:அவளோட விதிக்குத் தாராவாலேயும் விலக்காக இருக்க முடியல்லே; அவள் காட்டின வழியிலே, திசைமாறிப் போயிட்டா தாரா!- ஆனால், நீ தப்பிச்சிட்டே உன் சமர்த்தும் துணிவும் யாருக்கு வரும்?...களை எடுத்தால் தானே பயிர் வளரும், பார்வதி? அதே சட்டம் நம்ம சமுதாயத்துக்கும் உண்டுதானே? அதனாலேதான், இந்தச் சமுதாயம் சுகமாகவும் சுகத்தோடவும் வளரவும், மானத் தோடவும் மனிதத் தன்மையோடே வாழவும் வேண்டித் தான் விஷக்கிருமியான ஒரு சமூகப் புல்லுருவியைச் சமூகப் .பிரக்ஞையோடவே ஏழாவது மாடியிலேயே வேரோடு பிடுங்கி வீசி எறிஞ்சிடவும் மனம் துணிஞ்சேன்! - இந்த அளவிலே தார்மிகமான என்னோட சமுதாயக் கடன் நியாயமாகவே நிறைவேற்றப்பட்டிருப்பதாகவும் நான் நம்புறேன் !...பாவம், மாதங்கி! இன்றைக்கு சாயரட்சை சட்டப்பூர்வமாக எனக்கு வாழ்க்கைப்படக் கனவு கண்டுக்

  1. 41

141